ஒரு கோயில மையமா வச்சு கட்டப்பட்ட நகரம்..... மன்னிக்கணும்..... அழகான நகரம் தான் என்னோட மதுரை. இந்த மதுரைய தூங்கா நகரம்ன்னும் சொல்லுவாங்க. 12மாசமும் எங்க மதுரைல திருவிழா நடக்கும். மதுரை மல்லிகை பூ வாசம்..... அதுக்கு மயங்காத ஆளே இருக்க முடியாது.
அடிக்கிற வெயிலுக்கு குளு குளுன்னு ஜிகர்தண்டா, கரும்புச்சாறு, சர்பத், குச்சி ஐஸ்ன்னு இங்க கெடைக்காத எதுவுமே இல்ல. காந்தி மியூசியம், ராஜாஜி பார்க், தமுக்கத்துல பொருட்காட்சி, இப்டி பொழுதுபோக்குக்கு ஏகப்பட்ட விஷயம் இருக்கு எங்க மதுரைல.
அன்று மாலை 6:00மணி..... மீனாட்சி அம்மன் கோவில் வடக்கு கோபுர வாசல் வழியா காத்து வாங்கலாம்ன்னு நடந்து வந்தேன். அப்ப என்னோட ஞாபகத்துக்கு வந்தது கும்பாபிஷேகத்தப்ப இந்த இடம் எப்டி இருந்துச்சு இப்போ எப்டி இருக்குன்றது தான்.
ஆமாங்க..... கும்பாபிஷேகம் நடந்தப்போ கோவில சுத்தி யாரும் உக்கார கூடாது. கூட்டமா நின்டு பேசக்கூடாது. தினமும் காலைல கோவில சுத்தி கூட்டி பெருக்கி சுத்தமா வச்சுக்கணும். குப்பை போடக்கூடாது. அப்டி இப்டின்னு ஏகப்பட்ட கண்டிசன் போட்டுருந்தாங்க. நாங்களும் அப்ப அத பாளோ பண்ணோம்.
ஆனா இப்போ..... அங்கங்க கூட்டம் கூட்டமா உக்காந்து அரட்டை அடிச்சுகிட்டு இருந்த வயசானவங்க, பொரணி பேசிக்கிட்டு இருந்த பொம்பளைங்க, ஓடியாடி வெளையாடிக்கிட்டு இருந்த கொழந்தைங்க இத எல்லாம் பாத்துட்டு நானும் போய் உக்காந்தேன். அருமையான காத்து. அரசியல் பேசிக்கிட்டு இருந்த 2 ரிட்டயர்ட் ஆபீசர்கள். அவங்க என்ன தான் பேசுராங்கன்னு கவனிக்க ஆரம்பிச்சேன்.
வெள்ளை மீசை, வழுக்கை தலையோட இருந்த ஒருத்தர் வாயில வெத்தலைய மென்னுகிட்டே சொன்னாரு, "அங்க பாருங்க..... ஒன்னுக்கு ரெண்டு குப்பை தொட்டி இருக்கு ஆனா நம்மாளுக குப்பைய கீழ தான் போடுவாங்க. எதிர்ல கோயில் இருக்கே. கடவுள மதிக்கணுமே. குப்பைய போட்ட நமக்கு தான் கெடுதல் நடக்கும்ன்னு கொஞ்சம் கூட இவங்களுக்கெல்லாம் நெனப்பே இல்ல. கவர்மென்ட் "
பக்கத்துல இருந்த இன்னொருத்தர் சொன்னாரு, "எங்க முன்னாடி இருந்த கெடுபிடி இப்ப இல்ல. எல்லாரும் கடமைக்கு வேலை பாத்தா இப்டி தான். போலீஸ்காரங்க இதெல்லாம் கேக்குறதே கெடயாது. அப்பறம் எப்டி உருப்புடும்."
அப்போ ஒரு போலீஸ் வண்டி ஏதோ அனௌன்ஸ் பண்ணிக்கிட்டு வந்துச்சு. "கீழ உக்காந்துருக்கவங்க எல்லாம் எந்திரிச்சு போங்க. இங்க உக்கார கூடாது", இதான் அந்த அனௌன்ஸ்மென்ட். பாவம் அந்த போலீஸ்காரர் கத்துனது தான் மிச்சம். யாரும் எந்திரிச்சு போகல.
அப்ப அந்த வழுக்கை தலைக்காரர் சொன்னாரு, "ஆமா சும்மா எங்களையே வெரட்டுறது. இவங்களுக்கு இதான் வேலை. ஏதோ பொறுப்பா இருக்க மாதிரி காட்டிகிறது."
பேசிகிட்டே ரெண்டுபேரும் எந்திரிச்சு நடக்க ஆரம்பிச்சாங்க. சரி இவங்க வேற என்ன பேசுறாங்கன்னு கேக்க, நானும் அவங்க பின்னாடியே நடந்தேன். அப்ப ஒரு வெளிநாட்டு பொண்ணு கூல்டிரிங்க்ஸ் குடிச்சுட்டு அந்த டப்பாவ குப்பைதொட்டிய தேடி போய் போட்டுட்டு நடந்தாங்க. அத பாத்துட்டு அவர் சொன்னாரு, "வெளிநாட்டுகாரங்களுக்கு இருக்க புத்தி கூட நம்ம மக்களுக்கு இல்ல."
பேசிக்கிட்டே போனவரு, கோவில் வாசல்ல நின்டு செருப்ப கழட்டிட்டு சாமி கும்பிட்டாரு. கும்பிட்ட முடிச்சு ஒரு 2-3அடி நடந்தவரு 'த்தூ.....த்தூ.....த்தூ....."ன்னு வாயில இருந்த வெத்தலை எச்சிய துப்புனாரு.
இவ்ளோ நேரம் சுத்தத்த பத்தி கிழிய கிழிய பேசுன வாயா இதுன்னு தோனுச்சு எனக்கு. என்னடா இது மீனாட்சிக்கு வந்த சோதனை. கவர்மென்ட்ட தான் மதிக்கல, கடவுள மதிக்கலாமே.
இது கற்பனை கதை அல்ல..... உண்மையாகவே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி நடக்கும் அவல நிலை..... என் கண் எதிரில் நான் கண்ட காட்சிகள் இவை..... இதில் காவல் துறை மீது எந்த குற்றமும் இல்லை. மக்கள் நாம் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ளாததால் நேரும் அவலம். மேல் கூறியது போல் பலபேர் உலவுகின்றனர். என்று தீருமோ இந்த அவல நிலை.....

"கவர்மென்ட்ட தான் மதிக்கல..... கடவுள மதிக்கலாமே....."

Etharthamaana kathai.. super😊😊😊😊
ReplyDeleteThis is reality... evry1 must change..
ReplyDelete