Hi Future.....

அந்த காலத்துல 'இருக்கிறத விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைப்பட கூடாதுன்னு', பெரியவங்க சொல்லுவாங்க. அப்டி அவங்க சொல்றதுக்கு என்ன காரணம்னா..... அவங்க ஏற்கனவே எதாச்சு செஞ்சு எதையாச்சு பரிகுடுத்துருப்பாங்க..... அத நேரடியா சொன்னா நாம நக்கல் பண்ணுவோம்னு பயந்துபோய் இப்டி பழமொழின்ற பேருல சொல்லுவாங்க.

அவங்க சொல்லியே கேக்காதவங்க நான் சொல்லியா கேக்க போறாங்க????? என்னடா இவன் இவளோ பேசுனான் கடைசியில யாரும் கேக்க மாட்டாங்கன்னு வேற சொல்ரானேன்னு பார்க்குறீங்களா????? 70-80 வயசானவங்க சொல்லியே கேக்காதவங்க இன்னைக்கி காலைல பொறந்த நான் சொல்லி கேப்பாங்களா என்ன?????

ஆமாங்க நான் இன்னைக்கி தான் இந்த உலகத்துக்கு வந்தேன். இப்போ நான் செல்லபோறது என்னோட கடந்தகால வாழ்க்கைய பத்தி தான். அப்டி நான் என்னத்த சொல்லி இவங்க கேக்காம போனாங்கன்னு நீங்களே பாருங்க.

எங்கு பார்த்தாலும் குழந்தைகள் சத்தம். ஓன்று சிரிக்கும், ஒன்று அழுகும், ஒன்று விளையாடும், ஒன்று தூங்கும், இப்படி பல விதங்களில் மழலை கூட்டம் ஆனந்தமாய் திரிந்துகொண்டிருந்தன. சுற்றிலும் புகை. அந்த கூட்டத்தின் நடுவில் திடீரென ஒருவர் தோன்றினார்.

உற்று கவனித்தால் அவரது அங்கஅடையாளங்கள் நமக்கு புலப்படும். அவருக்கு முகமெல்லாம் வெண்பஞ்சு போல முடி அடர்ந்திருந்தது. தலையில் தங்கத்தால் செய்யப்பட்ட கிரீடம் அணிந்திருந்தார். வெண்பட்டு அணிந்து நின்றார். நம் நாட்டு அரசியல்வாதிகளைப் போல அவர் குரலை கரகரக்க, அந்த குழந்தை முகங்கள் தொண்டர்கள் போல அவரை கவனித்தன.

அந்தக்கிழவர் வேறு யாரும் அல்ல, படைப்புக் கடவுள் பிரம்மன் தான். அப்படியானால் இந்த மழலை கூட்டம் யார்????? இந்நேரம் நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.....

ஆம், என்றோ பிறப்பதற்காக காத்திருக்கும் சிசுக்கள் தான் அவை.

அந்த கிழவர் ஒவ்வொரு குழந்தையாக தூக்கி அதனிடம் ஏதோ  கேட்டுவிட்டு, "அப்படியே ஆகுக.....", என்று கூறி இறக்கி விட்டார். அவர்  இறக்கிய பிறகு ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு அறைக்கு சென்றன. கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் நகல ஆரம்பித்தது. இப்போது என் முறை வந்தது.

என்னையும் தூக்கினார் பிரம்மன். அப்போது தான் அவரை அருகில் பார்த்தேன். "குழந்தாய்..... நீ எந்த குடும்பத்தில் பிறக்க விரும்புகிறாய்?", என்று கேட்டார். 'ஓஹோ..... இதை தான் மற்றவர்களிடமும் கேட்டிருப்பார் போல', என்று எண்ணிக்கொண்டு, "இப்படி கேட்டால் நான் என்ன பதில் சொல்வேன்????? மற்றவர்களின் முடிவை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்..... நான் என் முடிவை தேர்ந்தெடுக்கிறேன்.", என்றேன்.

அவர் சிரித்துக்கொண்டே, "அதெல்லாம் சொல்ல இயலாது குழந்தாய்.", என்றார். "அப்படியானால் என்னென்ன விதமான குடும்பங்கள் இருக்கின்றன என்றாவது சொல்லுங்கள் அதைக்கொண்டு நான் தேர்வுசெய்கிறேன்", என்றேன். "சரி, சொல்கிறேன் கேள்", என்று கூறி தொடங்கினார்.

"பூலோகத்தில் பலவகையான தொழில்களை மக்கள் ஈடுபடுகிறார்கள்.  இதில் பழமையானது விவசாயம். ஆனால் அது இன்றைய நிலையில் மிகவும் நலிவுற்று இருக்கிறது. அதனால் விவசாயக் குடும்பம் மிகவும் ஏழ்மையான நிலையில் இருக்கும். பொறியியல், மருத்துவம், போன்ற மற்ற தொழில்கள் மிகவும் உயர்ந்த நிலையில் உள்ளன.", என்று கூறிக்கொண்டிருந்தார். அப்பொழுது எனக்கு தோன்றிய ஒரே எண்ணம், ' எந்த குடும்பத்தில் வேண்டுமானாலும் பிறக்கலாம் ஆனால் விவசாயக் குடும்பத்தில் மட்டும் பிறக்கக் கூடாது', என்று தோன்றியது.

மேலும் தொடர்ந்துகொண்டிருந்தார் அவர். "விவசாய நிலத்தில் வீடு கட்டுதல், இயற்கை விவசாயத்தை மறந்து மண்ணில் செயற்கை உரத்தை இறைத்து உணவையும் விஷமாக மாற்றியதனால் விவசாயம் நலிந்து, அதன் விளைவுகளால் மக்கள் உடல் கேட்டு மருத்துவமும் மற்ற துறைகளும் உயர்ந்துகொண்டிருக்கின்றன. இந்த நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் உணவுக்கு போர் நேரும் நிலை வந்துவிடும். இப்பொழுது சொல், உனக்கு எந்த குடும்பத்தில் பிறக்க விருப்பம்?????", என்று கேட்டார்.

இதுவே என் எதிர்காலத்தை தேர்வுசெய்யும் நேரம். எதிர்காலத்தில்  பொறியாளரும் கிடைக்கலாம். ஆனால் ஒரு வேலை உணவு கிடைப்பது சந்தேகமே. நான் விவசாயக் குடும்பத்தில் தான் பிறக்கவேண்டும் என்று முடிவு செய்து, "நான் விவசாயக் குடும்பத்தில் பிறக்க விரும்புகிறேன்", என்றேன். "நல்லது..... நீ அந்த அறைக்குள் செல். உன் முறை வரும்போது உன் விருப்பப்படி நீ பிறப்பாய்.", என்றார் குறும்பு சிரிப்புடன். நானும் அவர் காட்டிய அறைக்குள் சென்றேன்.

என்ன ஆச்சரியம் அந்த அறையில் நான் மட்டுமே இருந்தேன். நான் மட்டுமே எதிர்காலத்தை சரியாக தேர்வு செய்துள்ளேன் என்ற நம்பிக்கையிலும் பெருமிதத்திலும் ஆர்வத்துடன் காத்திருந்தேன். 

ஆனால் ஏன் அந்தக்கிழவர் அப்படி சிரித்தார்?????

என் முறையும் வந்தது. நான் பிறந்தேன். ஒரு பழமைவாய்ந்த விவசாயக் குடும்பத்தில். மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர் அந்த குடும்பத்தினர்.

சரி இவ்வளவும் இவனுக்கு சாதகமா தானே நடந்துருக்கு அப்பறம் ஏன் பொலம்புறான்னு பாக்குறீங்களா????? இதுக்கு அடுத்து நடந்தது தான் என் பொலம்பலுக்கு காரணம். அதையும் சொல்றேன் கேளுங்க.

அங்கே இருந்த ஒருவர் என் தந்தையை பார்த்து, "அடடே, சின்ன விவசாயி பெறந்துருக்கான் போல", என்றார். "அட நீ வேறண்ணே, இவன நான் பெரிய இன்ஜினியர் ஆக்க போறேன்", என்றார் என் அப்பா. "நம்ம வசதிக்கு எப்டி அவ்ளோ பெரிய படிப்பெல்லாம் படிக்க வைக்க முடியும்????? பேசாம விவாயாசத்துல பழக்கு", என்றார் அவர். அதற்கு அப்பா சொன்ன பதில் பிரம்மனின் சிரிப்பில் இருந்த சூட்சமத்தை எனக்கு தெளிவுபடுத்தியது.

"அதான் நிலம் இருக்கே. அதா வித்து படிக்கவைப்பேன்", என்றார். இதைக்கேட்டதும் எனது முதல் அழுகை பிறந்தது. 'இதுக்கா நான் இவ்வளவு ஆர்வமா காத்திருந்தேன்????? ச்ச.....', என்று என்னை நானே நொந்து கொண்டேன்.

"இன்னுமா இந்த உலகம் இன்ஜினியர் டாக்டர நம்பிக்கிட்டு இருக்கு????? கொஞ்சம் விவசாயம் பண்ணலாமே....."

Comments

  1. Superb anna real situation epa

    ReplyDelete
  2. Superb anna real situation epa

    ReplyDelete
  3. Super imagination na stry superb

    ReplyDelete
  4. Olagam edha nambudho thrla thambi aana naanga onna namburom in no nala nala kadhayellam eludhuvenu

    ReplyDelete
  5. We all know that Agriculture is very important. Yet, we don't understand its severeness. But, this story, undoubtedly exposes the need of Agriculture in an easy way. I really appreciate the story theme and I believe that in future, we have strong Agriculture and this process is started already... Your story puts much impact on this fact. Well Done!

    ReplyDelete
    Replies
    1. Thank you... Hope so our 'NATIONAL OCCUPATION' will come in command again.....

      Delete
  6. Ithu Unnoda storyya illa sudda storyya machi... romba supeerrrrr...👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    ReplyDelete
  7. Semma karpanai thiran. Superb nanba....

    ReplyDelete

Post a Comment