இரண்டாம் காதல் - பாகம் 1

ஒவ்வொருத்தருக்கும் அவங்க வாழ்க்கைல ஒரு காதல் இருந்துருக்கும். பொதுவா நம்மலோட காதல் வாழ்க்கைய பத்தி சொல்லனும்னா, காதல்ல நாம எல்லாருமே நம்பிக்கை இல்லாதவங்கன்னு தான் சொல்லுவேன். ஒரு தடவ காதல்ல தோத்தவன் மறுபடியும் காதலிக்க பயப்டுவான்னு சொல்லுவாங்க சிலபேர். இன்னும் சிலபேர் சொல்லுவாங்க யாரோ ஒருத்தரோட வரவு இன்னொருத்தர மறக்கவச்சுரும்ன்னு. இதுல எது உண்மைன்னு எனக்கு தெரியல. ஆனா ஒன்னு மட்டும் உண்மை. ஒரு மனுஷனோட வாழ்க்கைல காதல் எத்தனதடவ வேணும்னாலும் வரும். அது தப்பா இல்லையான்னு எனக்கு சொல்ல தெரியல.


இப்போ என் கதைய கேளுங்க. நான் தான் ஷிரிஷ். எனக்கு எதையும் வித்தியாசமா செய்யணும்ன்னு ஒரு ஆசை. அதை வெறின்னு கூட சொல்லலாம். இப்டி தான் எதையாச்சும் செஞ்சு ஏதாச்சு ஒரு பிரச்சனையில மாட்டி கஷ்டபடுவேன். ஆனா அதுவும் எனக்கு ரொம்ப பிடிச்சுருந்துச்சு. இந்த பிரச்சனைகள வித்யாசமான விதத்துல சமாளிக்கிறதுல எனக்கு ஒரு காதல்.

இவ்ளோ நேரம் நான் மேல சொன்ன காதலோட அர்த்தம் இப்போ உங்களுக்கு கொஞ்சம் புரிஞ்சுருக்கும்ன்னு நெனைக்கிறேன். இப்போ என்னோட 'காதல்'னால என்னென்ன நடந்துச்சுன்னு சொல்றேன் கேளுங்க.

நான் ஸ்கூல் படிக்கிறப்ப இருந்தே கொஞ்சம் வித்தியாசமா யோசிப்பேன். இதனாலயே என்னோட பிரெண்ட்ஸ் எல்லாம் அவங்க செய்ற தப்புல இருந்து தப்பிக்க என்ன தேடி வர ஆரம்பிச்சாங்க. நானும் அவங்கள காப்பாத்த விதவிதமா யோசனை சொல்ல ஆரம்பிச்சேன். இதனால அவங்க தப்பிச்சுடுவாங்க, நான் மாட்டிக்குவேன். இருந்தாலும் இந்த பழக்கம் என்ன விட்டு போகல. அது நான் வளர வளர என் கூடவே வளந்துடுச்சு. ஒவ்வொரு நாளும் என்னோட யோசிக்கிற வழியும் முறையும் மாறிகிட்டே இருந்துச்சு. அதனால அதுவரை எனக்கு எந்த பெரிய பிரச்சனையும் வராததால நானும் அத கண்டுக்கல.

என்னோட யோசிக்கிற தன்மைய நான் காதலிக்க ஆரம்பிச்சேன். அதனால எனக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காதலி கெடச்சாங்க. அட, விதவிதமான சூழ்நிலையையும், பிரச்சனையையும் தான் காதலின்னு சென்னேங்க. என்ன தான் தினம் ஒரு பிரச்சனையை பாத்தாலும் எனக்கு சலிக்கவே இல்ல. இன்னும் அதுல எனக்கு ஆர்வமும், வெறியும், ஆசையும் அதிகமாச்சு. நானும் ரொம்ப குறும்பு பண்ண ஆரம்பிச்சேன்.

அது என்ன எங்க கொண்டுபோய் நிறுத்துச்சு தெரியுமா????? ஜெயில்ல..... ஆமா நான் இப்போ ஜெயில் கைதி.

என்னோட இந்த பழக்கம் எப்போ விபரீதமா மாறுச்சுன்னா..... ஒரு நாள் ஒரு மியூசியத்துக்கு போயிருந்தேன். 'ஏதோ வெளிநாட்டு விருந்தாளிகள் வராங்களாம். அதனால அங்க கண்காட்சி ஏற்பாடு பண்ணியிருந்தாங்க. இந்த வாரம் முழுக்க கண்காட்சி இருக்காம். அவங்க நாளைக்கி மறுநாள் இங்க வராங்களாம்'ன்னு அந்த மியூசியம் வாட்ச்மேன் சொல்லிக்கிட்டு இருந்தாரு. அங்க எக்கச்சக்கமா பழங்காலத்து அரிய பொக்கிஷங்கள் எல்லாம் இருந்துச்சு. அங்க இருந்த ஒரு சிலையை பத்தி ஒரு கைடு கிட்ட கேட்டேன். அதுக்கு அந்த கைடு சொன்ன விஷயம் என்ன ரொம்ப பைத்தியமா ஆக்கீடுச்சு.

அவன் சொன்ன பதில் : "இது ரஷ்யா நாட்டுல இருந்து கொண்டுவந்த சிலை. இது பறிமுதல் செய்யப்பட்டு இப்ப தான் இங்க கொண்டுவந்துருக்கோம். அந்த நாட்டுல இருந்த ஒரு மியூசியம் ஓனர் ரொம்ப வித்தியாசமானவர். அவரே அவரோட மியூசியத்துல திருடி பொருட்கள் காணாம போச்சுன்னு சொல்லி அந்த நாட்டு போலீஸயே பைத்தியம் பிடிக்க வச்சுருக்காரு. அவ்ளோ பெரிய திறமையான ஆளு. அப்பறம் ஒருவழியா அவர பிடிச்சு அவரோட பொருட்கள் எல்லாம் ஏலத்துல விட்டாங்க. அப்ப கிட்டத்தட்ட 23கோடி ரூபாய் குடுத்து எடுத்த சிலை தான் இது."

அந்த பதில் என்னோட தூக்கத்தையே கெடுத்துடுச்சு. 'ஒரு சின்ன க்ளூ கூட குடுக்காம திருடியே மாட்டிக்கிட்டான். அவனைப்போய் வித்தியாசமானவன், திறமையானவன்னு சொல்லி பெருமையா பேசுறானே இந்த கைடு. இப்போ நான் சொல்றேன். நானும் திருடப்போறேன். எங்க திருடப்போறேன்னு போலீஸ்க்கு க்ளூ குடுத்து திருடுவேன். மாட்டவும் மாட்டேன். அப்ப தெரியும் நான் திறமையானவனா இல்ல அவன் திறமையானவனான்னு'.

இப்போ ஓரளவுக்கு புரிஞ்சுருக்கும் உங்களுக்கு. இந்த சபதத்தால தான் நான் ஜெயில்ல இருக்கேன்னு நீங்க முடிவு பண்ணிருப்பீங்க. அப்டி நீங்க நெனச்சுருந்தா, அது தப்பு. அடுத்து நடந்தது என்னன்னு கேட்டீங்கன்னா உங்களுக்கே புரிஞ்சுரும் என்னை பத்தி.

கண்ணாடியைப் பார்த்து எனக்கு நானே பேசிக்கிட்டு இருந்தேன். 'திருடன் ஆகணும்ன்னு முடிவு பண்ணியாச்சு எதை திருடுறது. எப்டி திருடுறது. இப்டி பல கேள்வி. யெஸ்..... அது தான் சரியான வழி. எங்க திருடனாகனும்ன்னு தோனுச்சோ அங்கேயே ஆரம்பிப்போம். அந்த மியூசியம் தான் சரியான இடம். இந்த வாரம் முழுக்க அந்த மியூசியம் மேல தான் எல்லாரோட கண்ணும் இருக்கும்ன்றது அந்த வாட்ச்மேன் சொன்னதுல இருந்தே தெரிஞ்சுச்சு. அது தான் சவாலான இடமும் கூட. கண்டிப்பா அங்க தான் திருடனும். ஆமா..... அங்க எதை திருடுறது?????'.

எனக்கே தெரியாம நான் சிரிக்கிறத கண்ணாடில பாத்தேன். நான் திருடனும்ன்னு நெனைக்கவச்ச அந்த சிலை. அதே சிலையை தான் திருடப்போறேன். கூடவே ஒரு தடயத்தையும் விட்டுட்டு வரப்போறேன். முடிஞ்சா போலீஸ் கண்டுபிடிக்கட்டும். யாராலயும் என்ன பிடிக்க முடியாது.

அதே மாதிரி திருடுனேன். யாராலயும் என்ன பிடிக்க முடியல. 3 தடவ திருடியும் என்னோட நோக்கம் என்னன்னு யாராலயும் கண்டுபிடிக்க முடியல. என்னோட நாலாவது திருட்டுக்கு முன்னாடி மாட்டிக்கிட்டேன். கடைசியா ஒரு போலீஸ் என்ன பிடிச்சுட்டான். இப்போ ஜெயில் சுவத்துக்கு நடுவுல உக்காந்து நடந்தத நெனச்சு பாத்துகிட்டு இருக்கேன். ஆனாலும் சொல்றேன். இந்த உலகத்துலயே நான் தான் தெறமையானவன். நான் தான் வித்தியாசமானவன்.

இப்பவும் அதே சிரிப்பு என் உதட்டோட ஒட்டிக்கிட்டு இருந்தது தெரிஞ்சுது. அது ஏன்னு உங்களுக்கு போக போக தெரியும்.....

Comments

  1. Nice story.. eppdithaan ippdilam yosikkaraiyoo.... 🙆🙆🙆

    ReplyDelete

Post a Comment