கனவுலகம் - பாகம் - 2 - ஓவியக்காட்சி

புயலில் தத்தளித்துக்கொண்டிருந்த எங்களுக்கு எதிரே ஒரு கப்பல் புயலை பொருட்படுத்தாமல் வந்துகொண்டிருப்பது தெரிந்தது. புயலின் தாக்கம் அந்தக்கப்பலை ஏதும் செய்யாதது எனக்கு ஆச்சரியத்தை தந்தது. அந்த கப்பல் அருகில் நெருங்கி வருகையில் தான் நான் ஒன்றை கவனித்தேன். அந்தக்கப்பலின் அடிப்பாகம் கடல்மட்டத்திருக்கு ஒரு அடி மேலே இருந்தது. அதாவது அந்தக்கப்பல் கடலில் மிதக்கவில்லை அது காற்றில் மிதந்து வந்தது.


அந்தக்காட்சி எனக்கு மேலும் கலவரத்தை ஏற்படுத்தியது. அந்தக்கப்பல் அருகில் வர வர எனது இதயத்துடிப்பு அதிகரித்தது. எனக்கு அந்த கப்பலில் இருந்த ஓவியத்தின் நினைவு எழுந்தது. ஒருவேளை அந்த அரக்கர்களின் கப்பலாக இருக்குமோ என்று பயந்தேன். அந்த இறைவனுக்கு என் இதய பாஷை கேட்டுவிட்டது போலும்.

ஆம். வந்தது அதே அரக்கர் கூட்டம் தான். அவர்களின் ஆரவாரமும் கூச்சலும் வானத்தை முட்டி அகோரமாக ஒலித்தது. என்னால் அவர்களில் சிலரின் உருவத்தை பார்க்க முடிந்தது. நான் சுதாரிப்பதற்குள் அந்த அரக்க கூட்டம் எங்கள் அனைவரையும் கைது செய்து அவர்களது கப்பலுக்கு கொண்டு சென்றுவிட்டது.


அந்த அரக்கர் கூட்டம் பார்ப்பதற்கு மிகவும் பயங்கரமாக காட்சியளித்தது. அவர்களில் சிலர் பாதி எறிந்த கோலத்தில், சாம்பல் நிறத்தில், உடலெங்கும் எலும்புக்கூட்டின் வடிவமும் சில இடங்களில் எலும்பு தெரிவதுமான உருவத்தை கொண்டிருந்தனர். நகங்கள் எனும் பெயரில் கூறிய எலும்புகள் தெரிந்தன. கோரமான ஒலி எழுப்பிக்கொண்டிருந்த அந்த உருவங்கள் தான் அந்த கப்பலின் பணியாளர்கள் என்பதை அவர்களில் சிலர் செய்யும் அலுவல்களை கண்டு புரிந்துகொண்டேன்.

அந்த பணியாளர்கள் உடலில் ஆங்காங்கே மிருக தோளால் ஆனா சிறு ஆடைகளை உடுத்தியிருந்தனர். பற்கள் மனித பற்களும் அல்லாமல், கடல் உயிரினங்களின் பர்கலாகவும் அல்லாமல், மிருகங்களின் பர்கலாகவும் அல்லாமல் கொடூரமாக காணப்பட்டன. அவர்களின் பற்களிலும் நகங்களிலும் இருந்த இரத்தக் கறையையும், அந்தக்கப்பலில் ஆங்காங்கே கிடந்த மனித சடலங்களையும் பார்க்கையில் இவர்கள் மனிதர்களை கொன்று உண்ணும் பாதகர்கள் என்பது ஒருவாறாக புரிந்தது.

அநேகமாக அவர்கள் அடிமைகளாக நடத்தப்பட்டிருக்கவேண்டும். அவர்களின் உடலில் ஆங்காங்கே சாட்டையால் அடிக்கப்பட்ட தழும்புகளும், காயங்களும் காணப்பட்டன. அவர்கள் யாராலோ வசியம் செய்யப்பட்டிருந்தது போல ஒரே வார்த்தையை முனுமுனுத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் எங்கள் கையில் விளங்கிட்டு அவர்களது தலைவனிடம் அழைத்துச்சென்றனர்.


அவர்கள் தலைவனிடம் செல்லும் முன் எங்களை சோதனை செய்தான் ஒருவன். அவனை பார்த்ததும் என் கண்ணை என்னாலேயே நம்பமுடியவில்லை. ஏனென்றால் முன் கண்டவர்கள் உடலில் ஆங்காங்கே தான் எலும்புக்கூடு தெரிந்தது. ஆனால் இவன் முழுவதுமாக எலும்புக்கூடாக காட்சியளித்தான். எலும்பன் அவர்களை விட உயர்ந்த பதவியில் இருப்பவன் என்பது அவர்கள் இவனுக்கு அளித்த மரியாதையிலேயே தெரிந்தது.

அவனை பற்றி கூறவேண்டுமானால், என்றோ உடுத்திய ஆடைகள் எரிந்து ஆங்காங்கே கிழிந்து தொங்கிக்கொண்டிருந்தன. முள் கம்பிகள் நீட்டிக்கொண்டிருக்கும் வகையில் கையில் உறை அணிந்திருந்தான். இடையில் போர்வாளும், தொழில் முள் கேடயமும் தொங்கிக்கொண்டிருந்தன.

விலங்குகளின் தோளால் செய்யப்பட்ட கால்மிதி அணிந்திருந்தான். கண் விழிகள் இருக்கும் இடத்தில் வெறும் குழி தான் இருந்தது. அவன் யாரைப் பார்க்கிறான் என்பதை கூட அறிய முடியாது. ஆனால் கோபம் வருகையில் மட்டும் அவன் கண்கள் இருக்கும் அந்த குழியில் ஒரு மாறுதல் ஏற்படும். எலும்பன் உடலில் ஒன்றும் இல்லையானாலும் பயமுறுத்துவதில் குறை ஏதும் வைக்காமல் பார்த்துக்கொண்டான்.

அவன் எங்கள் ஒவ்வொருவரையும் சோதனை செய்துவிட்டு எங்களிடம் இருந்த பணத்தையும் எங்கள் உடைமைகளையும் எடுத்து தனியே வைத்துவிட்டான். இந்த இடைவேளையில் எங்கள் கப்பல் கடலோடு போய்விட்டது.

திடீரென எலும்பன் ஏதோ ஒரு பெயரை சொல்லி கத்த, மற்ற அனைவரும் வாழ்க என்பது போல கோஷமிட்டனர். சில நொடி கோஷத்திற்கு பிறகு அனைவரும் மண்டியிட்டு மரியாதை செய்வது போல நின்றனர். அவர்கள் பார்த்த திசையில் நோக்கினேன். அந்த இருட்டின் இடையில் இருந்து மூன்று உருவங்கள் வெளியே வந்தன.

Comments

  1. Semma thriller machi... supera irukku.. pinnida poo..😉😉😉

    ReplyDelete

Post a Comment