அன்று 14-3-2011 மாலை 6:00 மணி.
நான் அந்தக் கடற்கரை சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தேன். கடலின் இரம்மியமான அந்த அழகு என்னை "வா" என்று அழைப்பது போல இருந்தது. சரி என்று கடற்கரை மணலில் இறங்கி அந்த கடல் தேவதையை தரிசிக்க சென்றேன்.
ஆஹா! என்னே ஒரு சனரஞ்சகமான சூழல் அங்கே. எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம். குடும்பங்களுடன் குதூகலமாக உலாவிக்கொண்டிருந்த பதிகள். மன நிம்மதிக்காகவும் உடலைக் குறைப்பதற்காகவும் காலாற நடந்துகொண்டிருந்த தனவான்கள். ஒரு பக்கம் பலூன் விற்கும் ஆசாமிகள். மறுபக்கம் "அதை வாங்கிக்கொடு" "இதை வாங்கிக்கொடு" என்று நச்சரித்துக் கொண்டிருந்த குழந்தைகள். மற்றொரு பக்கம் பஞ்சுமிட்டாய், சுண்டல், தேநீர் என்று கூவும் தினக்கூலிகள்.
இவர்கள் என்ன செய்தால் எனக்கென்ன? நான் நேரத்திற்கு என் வீட்டிற்கு செல்லவேண்டும் என்று எண்ணிக்கொண்டு பறக்கும் காகங்கள். சந்திரனின் வரவிற்காக பூ தூவி வைத்தது போல ஆங்காங்கே மின்னத் தொடங்கிய விண்மீன் கூட்டங்கள். பிரியாவிடை பெற்று கடலில் அடியில் சென்று தூங்கத் தயாராகிக் கொண்டிருந்த கதிரவன்.
அக்கதிரவனை வழியனுப்ப சில்லென்று வீசிய பூங்காற்று. "இறைவனே என்னே உன் படைப்பு. சிறந்த கலாரசிகறையா நீர்!..", என்று புகழ்ந்தவண்ணம் என் கால்களை கடல்நீர் நனைக்க நடந்து கொண்டிருந்தேன்.
ஒரு பக்கம் மழையில் நனைந்து சுருங்கிய காகித்தைப்போன்ற சுருக்கங்களுடன் கூடிய முகத்துடன், அந்த தள்ளாடும் வயதிலும் பூ விற்று பிழைக்கும் ஒரு பாட்டி. அந்தப் பாட்டியில் கூடையில் இருந்து மல்லிகை, முல்லை மற்றும் பிச்சிப்பூக்களின் வாசம்.அப்பப்பா பூந்தென்றல் மெல்லத் தீண்டியதினால் வெட்கமுற்று அவை சிரித்து சிலிர்த்ததினால் ஏற்பட்ட மனமோ? என்று எண்ணத் தோன்றும்.
மறுபக்கம் "1 பீஸ் 10 ரூபாய்" "1 பீஸ் 10 ரூபாய்" என்று உரக்க கத்தி ஊரையே தன் பக்கமாய் இழுக்க முயற்சித்துக் கொண்டிருந்தார் ஒரு வண்டிக்காரர். உண்மையில் அவரது கூவல் ஊரை இழுக்கவில்லை. அவரது வண்டியில் இருந்த கடல்மீன்களின் மனமே ஊரை இழுத்தது. ஆம். அது ஒரு துரித உணவு வண்டி. அதில் சிறப்பு உணவே பொறித்த மீன்கள் தான். அவற்றின் மனம் பசிக்காதவரையும் பசி மயக்கத்திற்கு இழுத்துச் சென்றுவிடும்.
"நலத்திற்கு என்ன குறை தோழரே. நலம் தான்", என்றார் அவர். அவர் சரியான கேளிக்கை பேர்வழி. எனக்கு அவரிடம் பிடித்ததே அவரது அந்த குணம் தான். எதையும் சிரிப்புடன் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நபர். எங்களது முதல் சந்திப்பை பற்றி எண்ண நினைத்த வேளையில், அவர் "என்ன தோழரே மலரும் நினைவுகளா?", என்று புன்னகைத்தவண்ணம் கேட்டார். "ஆம் தோழரே, நமது முதல் சந்திப்பின் நினைவு தான்", என்றேன்.
சிலர் எனது வளர்ச்சிக்குக் காரணம் அதிர்ஷ்டம் என்றனர். சிலர் அது எனது திறமைக்கும் உழைப்பிற்கும் கிடைத்த பரிசு என்றனர். பலர் விமர்சித்தனர். ஆனால், என்னைப் பொருத்தவரையில் நான் கேப்டனாக இருப்பது எனது துரதிர்ஷ்டமே. ஒரு கப்பலை பராமரிப்பது ஒன்றும் எளிய காரியமல்ல. அதுவும் ஒரு 25 வயது இளைஞன் பல விமர்சனங்களை கடந்து ஒரு கப்பலை நிர்வாகிப்பது மிகவும் சிரமமான காரியம்.
அன்று நான் செல்லவிருந்தது ஒரு பயணியர் கப்பல். ஒவ்வொரு கப்பலை பார்க்கும்போதும், 'இதுவே என் வாழ்நாளில் நான் பார்க்கும் பெரிய கப்பல்' என்ற பிரம்மிப்பு என்னுள் ஏற்பாடும். ஆனால், இந்த கப்பலை பார்த்தபின், அந்த எண்ணங்கள் அனைத்தும் பொய் என்றும் இதுவே உலகின் மிகப்பிரம்மாண்டமான கப்பல் என்ற உண்மையும் புரிந்தது. ஆம், நான் மட்டும் அல்ல, அந்த கப்பலைப்பற்றி கேட்டால் அனைவரும் இதையே சொல்வர் என்பதில் ஐயம் ஏதுமில்லை. இதோ அந்த பிரம்மாண்டத்தை பற்றி சில வரிகள்.
அந்தக் கப்பலின் பெயர் 'ரிபெல்லர்'. அதன் ஒரு பக்க முகப்பில் 'யூனிகார்ன்' என்ற ஒற்றைக்கொம்பு உடைய குதிரையின் தலை வடிவமும், மற்றொரு முகப்பில் 'டிராகன்' என்ற கொடிய நெருப்பை கக்கும் பாம்பின் தலை வடிவமும் அமைக்கப்பட்டிருந்தது. அந்த தலைகள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு வண்ணம் பூசப்பட்டிருந்தன. பார்ப்பவர், 'ஒருவேளை உண்மையாகவே அந்த அபூர்வ யூனிகார்ன் மற்றும் கொடிய டிராகனின் தலைகள் கொய்து வந்து இங்கே மாட்டிவிடப்பட்டிருக்கின்றனவோ', என்று எண்ணும் அளவிற்கு சிறந்த வேலைப்பாடுகள் அமைந்திருந்தன.
அந்தக் கப்பலின் எடை 52315 டன். அது 1187 அடி அகலம். சமுத்திரத்திற்கு மேல் 242 அடி உயர்ந்து நின்றது அந்த கப்பல். கணிசமாக ஒரே நேரத்தில் 5400 பயணிகளை சுமந்துகொண்டு, சராசரியாக மணிக்கு 47 கிலோ மீட்டர் வேகத்தில் பாயக்கூடியது. அதன் உள்ளே மொத்தம் 2086 அறைகள் இருந்தன. ஒரே நேரத்தில் 1200 - 1500 பேர் ஒன்றாக குழுமம் அளவிலான 3 அறைகள் அமைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 26 பாதுகாப்பு படகுகள் இருந்தன. ஒவ்வொரு படகிலும் சராசரியாக 450 பேர் பயணிக்கலாம். அதுமட்டுமின்றி எந்நேரமும் உணவும், மருந்தும் தேவையான அளவிற்கு கிடைக்கும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. நீச்சல்குளங்கள், ஆடல் அரங்குகள், கேளிக்கை நிகழ்ச்சிகள் என அனைத்து விதமான பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்திருந்தது அந்த 'ரிபெல்லர்'.
அது கிட்டத்தட்ட 200 அல்லது 300 ஆண்டுகள் பழமையான கப்பல் என்று கூறப்பட்டது. ஆனால் பார்ப்பதற்கு ஏதோ இன்று செய்தது போல புதுமை மாறாமல் காட்சியளித்தது. ஆங்காங்கே பொரிக்கப்பட்டிருந்த எழுத்துக்களையும், அடையாள சின்னங்களையும் பார்க்கையில், கரீபியர்களாலோ எகிப்தியர்களாலோ உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தோன்றியது.
யார் உருவாக்கினால் என்ன? இன்னும் சில நாட்களுக்கு நான் தான் இந்த 'ரிபெல்லரின்' எஜமான் என்று எண்ணிக்கொண்டு என் அறையை தேட ஆரம்பித்தேன். இன்று என்னால் ஒரு விஷயத்தை உணர முடிந்தது. ஒவ்வொரு கப்பலிலும் ஏறும்போது எனக்குள் இருக்கும் பயம் இப்போது இல்லை. பயத்திற்கு பதிலாக ஒரு புதுவித உற்சாகமும் ஒரு விதமான கர்வமும் என்னை தொற்றிக்கொண்டிருந்தது என்பதே உண்மை.
அங்கே என் அறையை கண்டுபிடிப்பதற்கே எனக்கு அரைமணி நேரம் ஆனது. என் உடைமைகளை என் அறையில் வைத்துவிட்டு, கப்பலில் உள்ள சந்திப்பு அறைகளில் பயணிகளை 3குழுக்களாக குழுமச்செய்தேன். பிறகு அவர்களுக்கு கப்பலை பற்றியும், பாதுகாப்பு ஏற்பாடுகளை பற்றியும், மற்ற தேவையான விஷயங்களையும் என்னுடன் சேர்ந்து, என் 12 உதவி மாலுமிகள் விவரித்து முடித்தனர்.
விரிவுரைகள் முடிந்த பின்னர், நான் கண்காணிப்பு அறைக்கு சென்று இந்த பயணத்தின் முழு விவரத்தையும் பார்த்தேன். இந்தப் பயணத்தில் என்னுடன் சேர்ந்து எனக்கு உதவியாக மேல்கூறியது போல 12 மாலுமிகள் பணியாற்றினர். 4320 பயணிகள். இந்தப்பயணம் இந்தியாவில் தொடங்கி அன்டார்டிகா வழியாக தென் ஆப்பிரிக்காவை அடைய வேண்டும். அங்கே உள்ள சில கலை பொருட்களை ஏற்றிக்கொண்டு மறுபடியும் இந்தியா வந்து சேரவேண்டும். இதுவே அப்பயணத்தின் விவரம். இதற்கான வரைபடம், வழி விவரங்கள் அனைத்தும் அந்த கண்காணிப்பு அறையில் காணப்பட்டன.
இந்தியாவிலிருந்து கப்பல் கிளம்பியது. நாங்கள் இரவு பகலாக பயணித்து அன்டார்டிகா பகுதியை அடைந்திருந்தோம். அன்டார்டிகா பகுதியை பற்றி கூறவேண்டுமானால், எங்கு பார்த்தாலும் வெண்பனி சூழ்ந்திருக்கும். சில்லென்ற காற்று ஊசியால் குத்துவது போன்ற உணர்வு ஏற்படும் அளவிற்கு குளிர். பனி மலைகளும், உறைந்த ஆறுகளும், சில இடங்களில் கடல் நீர் கூட உறைந்திருக்கும். எந்தவித சலனமும் இல்லாமல் அமைதியான சூழல் நம்மை பயமுறுத்தும். அந்த கடலுக்கு அடியில் பனி மலைகள் கண்ணுக்கு புலப்படாத வகையில் மறைந்திருக்கும். அவைகள் எவ்வளவு வலிமையான கப்பலாக இருந்தாலும் தகர்க்கக்கூடியவை. அந்த பயம் ஒவ்வொரு மாலுமிக்கும் இருக்கும். எனக்கும் இருந்தது.
ஒருவழியாக அன்டார்டிகா பகுதியை கடந்தோம். பயணிகள் வழியே இருந்த ஆபத்துகளை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் நேரத்தை கழித்து வந்தனர். கப்பல் எந்த ஒரு தடையும் இல்லாமல் தென் ஆப்பிரிக்க துறைமுகத்தை அடைந்தது. நாங்கள் அங்கே 3நாட்கள் தங்கிவிட்டு மறுபடியும் பயணத்தை தொடங்க தீர்மானித்திருந்தோம். அதே போல தென் ஆப்பிரிக்காவை அடைந்ததும் பயணிகளை இறக்கிவிட்டு நாங்களும், அதாவது நானும் என் துணை மாலுமிகளும், ஓய்வெடுத்தோம்.

என் துணை மாலுமிகள் பொழுதுபோக்குக்காக வெளியே செல்ல அழைத்தனர். நான் மற்றவர்களை மட்டும் போக சொல்லிவிட்டு கப்பலிலேயே இருந்தேன். அதற்கு காரணம் பயணத்தின்போது அந்தக்கப்பலில் நான் கண்ட சில விஷயங்கள் தான். முன்பு நான் சொல்லியிருந்தேன், இந்தக்கப்பல் கரீபியர்களாலோ எகிப்தியர்களாலோ உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்று. ஆம், இது கரீபியர்களால் உருவாக்கப்பட்ட கப்பல் தான். இதில் என்ன ஒரு ஆச்சரியம் என்றால், இது கடற்கொள்ளயர்களுக்காக தயாரிக்கப்பட்ட கப்பல்.
இவனுக்கு எப்படி இதெல்லாம் தெரியும் என்று பார்க்கிறீர்களா????? இவை அனைத்தும் அந்தக்கப்பலின் ஒரு அறையின் சுவற்றில் பொறிக்கப்பட்டிருந்த ஓவியங்களைக்கொண்டு நான் ஊகித்தது. அந்த ஓவியங்களை என்னால் முழுமையாக ஆராய முடியவில்லை. அந்த ஓவியங்களில் பல வினோத உருவங்களும், வித்தியாசமான காட்சிகளும் வரையப்பட்டிருந்தன. அந்த ஓவியங்கள் விசித்திர மிருகங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையே நடந்த போரை குறிப்பது போல இருந்தன. அதில் இருந்த எழுத்துக்கள் 'ஹிரோக்ளிப்ஸ்' எனப்படும் சித்திர எழுத்துக்கள்.
அந்த விசித்திர ஓவியங்களும், அந்த சித்திர எழுத்து முறையும் என் ஆர்வத்தை தூண்டின. இன்னும் ஆராய எண்ணியே கப்பலிலேயே இருந்துவிட்டேன். என் துணை மாலுமிகள் இல்லாத இந்த 3நாட்களை பயன்படுத்திக்கொள்ள எண்ணி வேலையில் இறங்கினேன். இரவும் பகலும் அந்த அறையிலேயே இருந்து அந்த ஓவியங்களை ஆராய ஆரம்பித்தேன். அந்த ஓவியங்கள், ஒரு கப்பல் தலைவன் பேசுவது போல அமைந்திருந்தது.
"புயலின் காரணத்தால் தனது கப்பலை உலகத்தின் மறுபக்கம் செலுத்த முற்படுகிறான் இந்த கப்பல் தலைவன். அமைதியான சூழல், சலனமில்லாத கடல் அவனை மயக்குகிறது. திடீரென அந்த சூழல் முற்றிலுமாக மாற கப்பல் தலைவன் சலனமடைகிறான். எதிர்பாராத விதமாக எதிர்பட்ட கப்பலும் அதில் இருந்த மனிதர்களும் அவனது மனதை இன்னும் கலவரமடைய செய்கின்றனர். அந்த மனிதர்களை இதுவரை யாரும் கண்டிருக்க முடியாது. அவர்கள் மனிதர்கள் தானா என்ற சந்தேகம் கூட எழும். மிருங்கங்களும் மனிதர்களும் சேர்ந்த கலவையாகவும், பேய்களின் உருவங்களாகவும் இருந்தனர். அவர்கள் வந்த கப்பலும் ஏதோ ஒரு நரக நகரமே கடலின் நடுவில் மிதந்து வந்ததுபோல காட்சியளித்தது. அவர்களின் மூர்க்கத்தனமான தாக்குதலினால் தடுமாறும் கப்பல் தலைவன், தன் பயணிகளை ஒருவாறு காப்பாற்றிவிடுகிறான். தான் மட்டும் அந்த மூர்க்க அரக்கர்களிடம் சிக்கிக்கொள்கிறான். அந்த அரக்கர்கள் அவனை தங்கள் கடல் மிருகத்திற்கு பலி கொடுக்கிறார்கள். அந்தக் கப்பலை அங்கேயே விட்டுவிட்டு அரக்கர் கூட்டம் மறைகிறது."
இதுவே என்னால் அறியமுடிந்த செய்தி. அந்த அரக்கர் கூட்டம் எங்கிருந்து வந்தது. அவர்கள் யார். அவர்கள் உண்மையா????? என்று என்னுள் கேள்விகள் எழுந்தன. ஆனாலும், 'இவையும் கட்டுக்கதைகள் தான்', என்று எண்ணி விட்டுவிட்டு கிளம்பினேன். ஆனால் அந்த அரக்கர்களில் உருவங்கள் சில அதில் வரையப்பட்டிருந்தன. மிகவும் கொடூரமான உருவங்கள். அந்த அரக்கர்கள் தலைவன், அவனது தளபதிகள், பணியாட்கள், போர் வீரர்கள் என ஒவ்வொரு தரப்பினரும் ஒவ்வொரு விதமாக இருந்தனர் அந்த ஓவியத்தில். 'நல்ல கர்ப்பனையுள்ள ஓவியன் வரஞ்சுருக்கான். சுவாரசியமான கற்பனை', என்று எண்ணிக்கொண்டு, வெளியே நடந்தேன்.
என் துணை மாலுமிகள் வந்தனர். 3நாட்கள் போனது அப்போதுதான் எனக்கு தெரிந்தது. அங்கே இருந்த சில கலை பொருட்களை கப்பலில் ஏற்றிக்கொண்டு மறுபடியும் இந்தியாவிற்கு பயணிக்க எண்ணினோம். வரவேண்டிய கலை பொருட்கள் வந்ததும் எங்கள் பயணத்தை தொடங்கினோம். வந்த அதே வழியில் கப்பலை செலுத்த ஆரம்பித்தோம். வருகையில் அமைதியாக இருந்த கடல் திடீரென பொறுமை இழந்தது. கொந்தளித்துக் கொண்டிருந்த கடலிடம் இருந்து எங்களைக் காப்பாற்றிக்கொள்ள எண்ணி, கப்பலை மறுபக்கம் திருப்ப ஆணையிட்டேன். நான் தாமதிக்க விரும்பவில்லை. குறிப்பிட்ட நேரத்தில் இந்தியாவை அடையவேண்டுமானால் மாற்று வழியில் செல்வதே சரி என்று தோன்றியது.
வந்த வழியை மறுத்து ஆஸ்திரேலியா வழியாக இந்தியா செல்ல முடிவெடுத்தேன். ஒருவாறு தாக்குப்பிடித்து போராடி, என் துணை மாலுமிகள் என் ஆணைக்கு இணங்கி கப்பலை திருப்பினர். மாற்று வழி சுலபமான வழி அல்ல. வந்த வழியை விட தூரம் அதிகம். பகல் பொழுது எந்த ஒரு அபாயமும் இன்றி சென்றது.

நடு இரவு நேரம். பால்நிலா மேகங்களுக்கு இடையே பளிச்சென்று தலைநீட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. கடல் சலானமில்லாமல் ஓய்ந்திருந்தது. வெண்ணிலவின் வெளிச்சத்தில் எண்கள் பயணம் அமைதியாக நடந்துகொண்டிருந்தது. இதை நான் நினைத்துக் கொண்டிருக்கையில் திடீரென ஒரு பயங்கர புயல் வீசத்தோடங்கியது. பாய்மரங்கள் அங்கும் இங்கும் அல்லோலப்பட்டன. கப்பலின் உள்ளே கடல் நீர் புகுந்து கப்பலை கவிழ்க்கும் அளவுக்கு புயல் வேகம் அதிகரித்தது. இந்த நிலை நீடித்தால் கப்பலை மட்டும் அல்ல எங்கள் உயிரையும் காப்பாற்ற முடியாது என்பது உறுதியானது. எங்களை பயமுறுத்தும் வகையில் நிலவும் மறைந்துபோனது.

Semmayaana concept... really fantastic bro...
ReplyDelete