இந்தக்கதைக்கு இன்னும் பேர் வைக்கல.....

வாழ்க்கையில் பாதியை கனவிலும், தவறான "முடிவின்" பின்னாலும் சென்று கழித்தவன் நான். எனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்று என் மனம் நினைத்துக் கொண்டிருந்த நேரம் அது.

அப்பொழுது தான் அந்த சந்தர்ப்பம் அமைந்தது. கடவுளாய் பார்த்து எனக்கு அளித்த ஒரு வாய்ப்பை அதை எண்ணி செயலில் இறங்கினேன். என் எண்ணம் போல அது ஒரு வித்தியாசமான வாய்ப்பாக அமைந்தது.

நான் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த இளைஞன். கஷ்டப்பட்டு இன்ஜினியரிங் படித்து முடித்தேன். எனக்கு வித்தியாசமான செய்திகளை படிக்கவும் கேட்கவும் பிடிக்கும். அதை ஆராய்வதில் எனக்கு ஒரு தனி இன்பம். ஒரு ஆர்வம் என்று கூட சொல்லலாம். எதையும் இயற்க்கைக்கு மாறாக யோசிப்பது என் வழக்கம். மற்றவரின் கோணம் ஒரு போல் இருந்தால் என் கோணம் வேறொன்றாக இருக்கும். இதனால் பலமுறை அதிகப்பிரசங்கி என்று திட்டு வாங்கியதுண்டு. ஒரு பத்திரிக்கையாளன் அப்படி தானே இருக்கவேண்டும். ஆம் நான் ஒரு பத்திரிக்கையாளன்.

என் பெயர் சத்யா.....

அன்று மார்ச் 14, 2015. செய்தித்தாளில் அந்த செய்தி வெளியானது. பகீர்ர்!!! என்று இருந்தது எனக்கு. செய்தி என்னவென்றால்...

"கனவில் தாக்க முயன்றதாக வழக்கு தொடுத்த தொழிலதிபர். பணம் கேட்டு மிரட்டியதாகவும், கத்தியால் கையில் வெட்டியதாகவும் காயத்தைக் காட்டி உளறல். காவல்துறை சிரிப்பு..."

காவல்துறைக்கும் பத்திரிக்கயாளர்களுக்கும் இது சிரிப்பாக இருக்கலாம். ஆனால், எனக்கு இது சுவாரசியமாக தோன்றியது. இதில் ஏதேனும் மர்மம் இருக்குமோ என்று தோன்றியது. ஆராயத்தோன்றியது.

அந்த தொழிலதிபரின் விவரம் அறிந்தேன். அவர் பெயர் ஜேம்ஸ் மாத்தீவ். அவர் பிரபலமானது அவரது புதிய பேட்டியின் மூலமாகத்தான் என்றும், அந்த பேட்டி 4 நாட்கள் முன் தான் ஒளிபரப்பானது என்று அறிந்தேன். அந்த பேட்டியின் ஒளிபரப்பை மறுபடியும் பார்த்தேன். ஏதோ ஒன்று என் மனதை உறுத்தியது.

இதை நினைத்துக்கொண்டிருக்கையில் வேறொரு செய்தி வெளியானது:

"கனவில் மிரட்டிய உருவம். பயந்து 2கோடி ரூபாய் கொடுத்ததாக புலம்பும் சீமான். இது கனவா நிஜமா??"

இதற்கு காவல்துறை ஆய்வாளர் கொடுத்த பேட்டியில், "கனவில் நடந்ததாக கூறுகின்றனர். வீட்டிலும் வேறு நபரின் நடமாட்டதிற்குரிய எந்த தடயமும் இல்லை. பிரம்மை என்றும் கூற நினைத்தால் காயமும், பணம் குறைவதும் உண்மையாக இருக்கிறது. விசாரணை நடக்கிறது. குற்றவாளி தண்டிக்கபடுவர்", என்று கூறியிருந்தார்.

இந்த முறை பாதிக்கப்பட்டவரின் பெயர் ராம் கணேஷ். அவர் ஒரு மென்பொருள் தொழிலகம் நடத்தும் நபர். அவரது கம்பெனி இந்த மாதம் 8கோடி லாபம் எட்டியதாகவும் இதுவே ஒரு மாதத்தில் பெறப்பட்ட அதிகபட்ச லாபம் என்று ஒரு அறிக்கை வெளியானது. இது நடந்தது சரியாக 4 நாட்கள் முன்.

ஆக இரண்டுமே பணத்திற்காக நடந்தவையே என்று புரிந்தது. இதில் உள்ள மர்மத்தை அறிய எண்ணினேன். இந்த இருவரின் விஷயத்திலுமே ஒற்றுமையாக இருப்பவை இரண்டு. ஒன்று பணம். இன்னொன்று "கனவு".

அவர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்குமா என்று எண்ணிக்கொண்டிருந்த சமயம் ஒரு வாய்ப்பு அமைந்தது. இருவரும் பத்திரிக்கயாளர்கள் சந்திப்பிற்கு வருவதாக கேள்விப்பட்டேன். அவர்களை சந்திக்க நானும் சென்றேன். அவர்களை தனிமையில் சந்தித்து ஏதேனும் புதிய விவரம் கிடைக்குமா என்று பார்க்க எண்ணினேன்.

சந்திப்பு முடிந்ததும், அவர்கள் இருவரையும் சந்தித்து பேசினேன்.

சத்யா: வணக்கம் சார். நான் சத்யா. (கை குலுக்கினேன்). நீங்க தப்ப நெனைகலனா ஒரு 10நிமிஷம் பேசலாமா??

அவர்கள் சம்மதித்தனர்.

சத்யா: (ஜேம்ஸ் மாத்தீவிடம்) சார், நீங்க பேட்டி குடுத்த 4 நாள்ல உங்களுக்கு கனவு வந்துருக்கு. சரியா??

ஜேம்ஸ்: ஆமாம்.

சத்யா: சார், உங்கள கனவுல மிரட்டுன அந்த உருவம் எப்டி இருந்துச்சுன்னு உங்களால சொல்ல முடியுமா??

ஜேம்ஸ்: முகம் சரியா தெரியல. முகத்துல சாயம் பூசிருந்தான். ஒரு 25வயசு இருக்கலாம். கருப்பான ஆள்.

சத்யா: சார், முகத்துல சாயம் பூசிருந்தான்னு சொல்றீங்க அப எப்டி கருப்பான ஆள்னு அடிச்சு சொல்றிங்க??

ஜேம்ஸ்: அவன் கை நான் பாத்தேன். அது கருப்பா தான் இருந்துச்சு. அவன் கண்ணு பிரௌன் கலர்ல இருந்துச்சு. அவ்ளோ தான் கவனிச்சேன். மத்த எதுவுமே ஞாபகம் இல்ல.

சத்யா: சரி சார். ரொம்ப நன்றி. ராம் கணேஷ் சார். உங்களுக்கும் இதே மாதிரி தான் உங்க கம்பெனி லாபத்த பத்தி எல்லாரும் பெருசா பேசுன அப்பறம் தான் உங்களுக்கு கனவு வந்துச்சு. உங்களால அடையாளம் சொல்ல முடியுமா.

ராம்: அவர் சொன்ன அதே அடையாளம் தான். வேற ஏதும் ஞாபகம் இல்ல.

சத்யா: நல்ல யோசிங்க சார். வேற எதாச்சு நிச்சயமா ஞாபகம் வரும்.

ராம்: அவன் வலது புருவத்துல ஒரு வெட்டு இருக்கும்.

சத்யா: வேற ஏதும்...

ராம்: அவன் கையில ஒரு 'Y'ன்னு பச்சை குத்திருந்துச்சு.

சத்யா: இது போதும் சார். நீங்க போகலாம்.

இருவரும் செல்கின்றனர். எனக்கு கிடைத்த தடயங்கள்:

  1. நிறம் கருப்பு
  2. பிரௌன் நிற கண்கள்
  3. 25வயது மதிக்கத்தக்க ஆள்
  4. வலது புருவத்தில் வெட்டு
  5. கையில் Y பச்சை
ஒருவேளை இந்த இருவரும் பொய்யான தகவல் கொடுத்து ஊரை ஏமாற்றியிருக்கலாமோ என்றும் தோன்றியது.
எனக்கு ஒரு புதிய யோசனை உதித்தது. ஏன் நாம் அந்த "கனவு கள்வனை" நம் கனவில் வரவைக்கக்கூடாது. அவ்வாறு செய்தால் ஏதேனும் பலன் கிடைக்குமா. முயற்சி செய்து தான் பார்ப்போமே. துணிச்சலாக முடிவெடுக்கும் தருணம் இது என்று தோன்றியது. அப்போது தான் அது எனக்கு நினைவிற்கு வந்தது. பொய்யாக ஒரு வீடியோ தயார் செய்தேன். அந்த வீடியோவில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடப்பது போல் செய்தேன். அந்த சந்திப்பில் நான் பேட்டி அளித்தேன். பேட்டியில்:

"அந்த கனவுத்திருடனை நான் நெருங்கிவிட்டேன். அவனைப்பற்றிய தகவல் அனைத்தையும் சேகரித்துவிட்டேன். அவன் விட்டுச்சென்ற தடயங்கள் சேகரித்தேன். அவனைப்பற்றிய அனைத்து விவரத்தையும் இன்னும் 2நாட்களில் நீதிமன்றத்தில் ஒப்படைப்பேன்", என்று கூறியிருந்தேன்.

இதற்கு என் பத்திரிகை நண்பர்கள் துணையாய் இருந்தனர். அந்த வீடியோவை அனைத்து ஊடகங்களிலும் ஒளிபரப்பினேன். இதனால் நகரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறை ஆய்வாளரிடம் இருந்து அழைப்பு வந்தது. எப்பொழுதும் போல "அதிகப்பிரசங்கி" என்று பட்டம் கிடைத்தது. அத்துடன் என் முயற்ச்சிக்கு ஒரு வாய்ப்பும் அமைந்தது. ஆய்வாளர் என் முயற்சிக்கு வாய்ப்பு வழங்கினார். ஒரே நாளில் பிரபலம் ஆனேன்.

அன்று ஏப்ரல் 14, 2015. என் தோழர்களுடன் அலுவலகத்தில் அரட்டை அடித்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது,

சிக்கந்தர்: ஏன்டா சத்யா, நாம பண்ண முயற்சிக்கு எதாச்சு பலன் இருக்கா??

சத்யா: ம்ம்... இப்போதைக்கு ஏதும் இல்லடா. ஆனா கண்டிப்பா நாளைக்கு ராத்திரி அந்த திருடன நான் சந்திப்பேன். இது மட்டும் உறுதி.

அனிதா: எப்டிடா இவ்ளோ அழுத்தமா சொல்ற??

சத்யா: என் கணிப்பு சரியா இருந்தா நாளைக்கி அவன் என்ன பாக்க வருவான்.

சிக்கந்தர்: எப்டிடா???

சத்யா: ஒரு சின்ன லாஜிக் தான்.

அனிதா: என்ன லாஜிக்??

சத்யா: ஜேம்ஸ்க்கு கனவு வந்தது சரியா பேட்டி குடுத்து 4நாள் கழிச்சு. அதே ராம் கணேஷ எடுத்துகிட்ட அவருக்கும் அதே தான் 4நாள். நாம வீடியோ ரிலீஸ் பண்ணி இன்னியோட 3நாள் ஆகுது. சோ, நாளைக்கு அவன் கண்டிப்பா வருவான் நு தோணுது. பாக்கலாம்.

சிக்கந்தர்: சரிடா அப்டியே அவன் வந்தாலும் என்ன பண்ணப்போற?? எனி பிளான்??

சத்யா: இப்ப வர எந்த பிளானும் இல்ல. ஓகே நான் நாளைக்கு லீவு. (பையை எடுத்துக்கொண்டு கிளம்பினேன்).

அவன் கனவில் வந்தால் என்னால் முடிந்தவரை அவனது அடையாளங்களை கண்டுகொள்ள எண்ணினேன். ஏனென்றால் இது ஒன்று தான் எனக்கு கிடைக்கப்போகும் ஒரே வாய்ப்பு. கனவுகளைப்பற்றியும், கனவில் தெரியும் காட்சிகளைப்பற்றியும் படித்துக்கொண்டிருந்தேன். என்னை காத்துக்கொள்ள தேவையானவற்றை எடுத்துக்கொண்டேன்.

அன்று ஏப்ரல் 15 2015. இரவு. எனக்கு என்ன நடக்கும் என்றும் அதை நான் எப்படி சமாளிக்கப்போகிறேன் என்றும் எனக்கு தெரியாது. ஆனால் எனக்கு கிடைத்த வாய்ப்பை நான் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமே எனக்குள் இருந்தது.

அன்று எனக்கு கனவு வந்தது. அவனும் வந்தான்.

முகத்தில் சாயம். கறுப்புக் கண்ணாடி. கையில் Y பச்சை. புருவத்தில் வெட்டு. அவனே தான்.

அவன்: என்ன பத்தி ஏதோ செகரிசுருக்கியாமே??

சத்யா: ஆமா..(ஒரு கர்வ சிரிப்புடன்)

அவன்: நான் எந்த தடயமும் எங்கயுமே விட்டது இல்ல. உனக்கு மட்டும் எப்டிடா கெடச்சுது?? (ஒரு சந்தேகக்குரலில்)

சத்யா: அதான் நான்..

அவன்: என்னடா நீ??? அவ்ளோ பெரிய ஆளா நீ??

சத்யா: இதோ உன்ன என் கனவுல வர வச்சேனே... நான் எதிர்பாத்த மாதிரியே 4நாள்ல என் கனவுல பயந்துபோய் வந்து நிக்கிரியே அதுவே எனக்கு வெற்றி தானே.

அப்பொழுது ஒரு பலமான அடி என் கன்னத்தில் விழ நான் கீழே விழுந்தேன். எழுந்து அவனை பார்த்தேன். இப்பொழுதே என் கண்ணில் ஒரு புதிய தடயம் தென்பட்டது. அதை மனதில் பதிய வைத்துக்கொண்டேன். என் அருகில் வந்தான் அவன்.

அடித்து துவைக்கப்பட்டேன். கனவு கலைய இன்னும் சிறிது நேரமே இருந்தது. அதற்குள் ஏதேனும் அடையாளத்தை அவனிடம் ஏற்படுத்த நினைத்தேன். அப்போது என்னைக்காக்க வைத்திருந்த கத்தியால் அவன் வலது காலின் பாதத்தில் குத்தினேன். கோபத்தில் என்னை நோக்கி வந்தவன் என் வயிற்றில் குத்தினான். சுவற்றில் முட்டி கீழே விழுந்தேன்.

அன்று ஏப்ரல் 17, 2015. காலை 11:27. கண் விழித்தபோது மருத்துவமனை கட்டிலில் கிடந்தேன். 2நாட்கள் சுயநினைவின்றி இருந்திருக்கிறேன் என்று புரிந்தது.

காவல்துறை ஆய்வாளர் என்னை காண வந்திருந்தார்.

ஆய்வாளர்: பாரு உன் அதிகப்பிரசங்கித்தனத்தால இப்ப என்ன ஆச்சுனு. அவன் உன்ன கொன்றுந்தா என்ன பண்ணிருப்ப??

சத்யா: கனவுலயே செத்துருப்பேன். நீங்களும் இந்த கேஸ கண்டுபிடிக்க மண்டகாஞ்சு போயிருப்பீங்க.

ஆய்வாளர்: இப்ப மட்டும் என்னத்த கண்டுபிடிச்ச?? அடி வாங்கி 2நாலா நினைவே இல்லாம தான் இருந்துருக்க. வேற அந்த பிரயோஜனமும் இல்ல.

சத்யா: (சிரிப்புடன்) பிரயோஜனம் இருக்கு சார். உருப்படியா ஒரு வேலை பாத்துருக்கேன்.

ஆய்வாளர்: என்ன வேலை??

நான் என் பையில் இருந்த கத்தியை எடுத்து நீட்டினேன். அதை கண்ட ஆய்வாளர் அதிர்ந்தார்.

ஆய்வாளர்: என்ன இது??

சத்யா: இது நான் கனவுல அவன குத்துன கத்தி. அவனோட வலது கால் பாதத்துல காயம் இருக்கும். இன்னும் ஒரு 1மாசம் அவனால சரியா நடக்க முடியாது.

ஆய்வாளர்: இத வச்சு அவன எப்டி கண்டுபிடிக்கிறது??

சத்யா: இதுல அவனோட ரத்தம் இருக்கு. இத DNA டெஸ்ட் பண்ணா எதாச்சும் தடயம் கெடைக்கலாம். அதே போல சிட்டில இருக்க எல்லா ஹாஸ்பிட்டல்லயும் வலது பாதத்துல வெட்டுகாயத்தோட வந்த நோயாளிங்களோட விவரத்த வாங்குங்க.

ஆய்வாளர்: ம்ம். ஏதோ சொல்ற. என்ன ஆகுதுன்னு பாக்கலாம்.

2 நாட்களில் ஒரு அழைப்பு வந்தது ஆய்வாளர் அலுவலகத்தில் இருந்து. நானும் சென்றேன்.

ஆய்வாளர்: வா சத்யா. இப்போ எப்டி இருக்க??

சத்யா: பரவால்ல சார். அந்த லிஸ்ட் கெடச்சுதா??

ஆய்வாளர்: அத பத்தி பேச தான் உன்ன வர சொன்னேன்.

ஒரு பேப்பரை என்னிடம் நீட்டினார். அதில் கிட்டத்தட்ட 50பேர் பெயர் விலாசம் இருந்தது.

ஆய்வாளர்: இதுல நாம தேடுற ஆள் யாரு??

சத்யா: சார் இதுல நாம எல்லாரையும் பாக்க போறது இல்ல. நாம தேடுற ஆள் இந்த லிஸ்ட்ல இல்லாம கூட போகலாம்.

ஆய்வாளர்: (குழப்பத்துடன்)...??!!

சத்யா: என்ன சார் கொழப்பம இருக்கா?? ஒரு சின்ன லாஜிக் தான் சார். இது வரைக்கும் கனவுல நடக்குற விஷயம் உண்மையாவே நடந்துருக்கா??

ஆய்வாளர்: இல்ல..

சத்யா: சார் இது மனதளவுல எல்லாரையும் பயமுறுத்த நடக்குற ஒரு முயற்சி. இது பிரபலம் ஆகணும்ன்னு எதிர்பாகுற யாராச்சு செய்ற வேலையா கூட இருக்கலாம். என்ன பொறுத்த வரைக்கும் இத பண்றது 2 பேராதான் இருக்க முடியும். ஒன்னு ஒரு மெஜீசியன் அப்டி இல்லனா ஒரு சைகாற்றிஸ்ட். அவர் டாக்டரா இருக்கலாம் அல்லது மெடிக்கல் படிக்கிறவங்களா கூட இருக்கலாம்.

ஆய்வாளர்: ??!!

சத்யா: என் கனவுல வந்த உருவத்துக்கு ஒரு 25 அல்லது 28 வயசு இருக்கும். அவன் பண்ண ஒரே தப்பு அவன் போட்ருந்த டிரஸ்.

ஆய்வாளர்: டிரஸ் வச்சு எப்டி கண்டுபிடிக்க முடியும். ஒரே மாதிரி நெறையபேர் போடா வாய்ப்பு இருக்கு.

சத்யா: இருக்கு சார். டிரஸ் வச்சு கண்டு பிடிக்க முடியாது தான். ஆனா அந்த டிரஸ் கோட் வச்சு கண்டுபிடிக்கலாமே.

ஆய்வாளர்: வாட் டூ யூ மீன்...??

சத்யா: ஆமா சார். நான் ஏற்கனவே சொன்ன மாதிரி ஒரு மெஜீசியன் அல்லது ஒரு டாக்டர் தான் இப்டி பண்ணிருக்கணும். அனேகமா ஒரு டாக்டரா தான் இருக்க முடியும்.

ஆய்வாளர்: எனக்கு புரியல சத்யா.

சத்யா: சார் லெட்ஸ் கம் டூ எ பாய்ன்ட்... ஒரு மெஜீசியன் பார்மல் டிரஸ் போட்டு பத்துருக்கீங்களா??

ஆய்வாளர்: இல்ல..

சத்யா: தட்ஸ் இட்... என் கனவுல வந்த உருவம் போர்மல் டிரஸ்ல இருந்துச்சு. சோ இந்த உருவம் கண்டிப்பா ஒரு டாக்டர் தான். ஹீ ஷுட் பீ எ சைகாற்றிஸ்ட்.

ஆய்வாளர்: அப்டியே டாக்டரா இருந்தாலும் எப்டி கண்டுபிடிக்கிறது??

சத்யா: சார், அவன் ஒரு இடது கை பழக்கம் உள்ளவன். அண்ட் அவன் டெய்லி ரன்னிங் அல்லது வாக்கிங் போறவன்.

ஆய்வாளர்: எப்டி சொல்ற??

சத்யா: சார் அவன் கத்தியால நான் குத்துனப்போ அவன் இடது கை தான் தடுத்துச்சு. வலது கையவிட இடது கையோட உபயோகம் அவன்ட அதிகமா இருந்துச்சு. ஒரு இடது கை பழக்கம் உள்ள ஆளால மட்டும் தான் இப்டி செய்ய முடியும். அப்பறம் நா கீழ விழுந்து இருந்தப்ப அவன் போட்ருந்த ஷூல செம்மண் அழுக்கும் கொஞ்சம் கோரப்புல்லும் இருந்துச்சு. இந்த கோரப்புள்ளும் களிமண்ணும் பார்க்ல மட்டும் தான் ஒண்ணா இருக்கும்.

ஆய்வாளர்: (வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார்).

சத்யா: நம்ம சிட்டில வாக்கிங்க்கு அனுமதிக்கிற பார்க் 3 தான். அதுல நம்ம எதியாலாஜி பார்க் தான் புல்லோட இருக்கும். நாம அங்க போனா எதாச்சு கெடைக்க வாய்ப்பு இருக்கு.

ஆய்வாளர்: ப்ரில்லியண்ட்...(தோளில் தட்டிக்கொண்டே).

சத்யா: நாளைக்கி நாம பார்க் போறோம்.

அன்று ஏப்ரல் 20, 2015. காலை 6.00 மணி.

நானும் ஆய்வாளரும் காயமுற்ற கள்வனை தேடி பார்க் முழுவதும் அலைந்தோம். ஏதும் நடக்கவில்லை.

ஆய்வாளர்: என்ன சத்யா நடந்தது தான் மிச்சம். என்ன ஆச்சு??

சத்யா: என் கெஸ் தப்பாகாது சார். எனக்கு என்னமோ இங்க அவன் கெடைப்பான்னு தோணுது.

திடீரென்று, பேசவந்த ஆய்வாளரை நிறுத்திவிட்டு கூர்ந்து கவனித்தேன்.

சத்யா: (சிரிப்புடன்) சார் அவன் கெடச்சுட்டான்.

ஆய்வாளர்: எங்க??

சத்யா: எனக்கு அவன் குரல் நல்ல கேக்குது..

நானும் ஆய்வாளரும் ஒரு மரத்தருகில் நின்றோம். அங்கே இரு நபர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.

நபர் 1: என்ன டாக்டர் 2 3 நாளா பார்க் பக்கம் ஆளையே காணாம்??

நபர் 2: ஒன்னும் இல்ல சார், கத்தி கால்ல விழுந்துடுச்சு நடக்க முடியல. அதன் ரெஸ்ட்ல இருந்தேன்.

நபர் 1: இப்ப பரவால்லையா டாக்டர்??

நபர் 2: பரவால்ல...

நபர் 1: நீங்களே கட்டு போட்டுடின்களா??

நபர் 2: சார் நா வெறும் சைகாற்றிஸ்ட். நம்ம சந்திரசேகர் தான் ட்ரீட்மென்ட் பாத்தாரு.

நான் ஆய்வாளரை அழைத்துக்கொண்டு டாக்டர் சந்திரசேகரிடம் சென்றேன்.

ஆய்வாளர்: டாக்டர் ஒரு சின்ன ஹெல்ப் தேவைப்படுது.

டாக்டர்: சொல்லுங்க சார்.

ஆய்வாளர்: உங்ககிட்ட ஒரு 2 நாள் முன்னாடி ஒரு சைகாற்றிஸ்ட் வந்தாரு இல்லையா??

டாக்டர்: ஆமா சார்.. நம்ம வசந்த்.

ஆய்வாளர்: அவர பத்தி கொஞ்சம் தகவல் தெரியனும்.

டாக்டர்: என்ன தெரியனும் சார்.

ஆய்வாளர்: அவரோட ப்லொட் சாம்பிள் வேணும். கெடைக்கும??

டாக்டர்:அது எப்டி சார் நான் தர முடியும்.

ஆய்வாளர்: நா வாரண்டோட வந்துருக்கேன். நீங்க தந்து தான் ஆகணும். அண்ட் இது வெளிய யாருக்குன் தெரியக்கூடாது.

டாக்டர்: (தயங்கினார். பின் வேறு வழி இன்றி கொடுத்தார்)

ஆய்வாளர்: வசந்த் இடது கை பழக்கம் உள்ளவரா??

டாக்டர்: ஆமாம் சார்.

ஆய்வாளர்: அவர் சமீபத்துல ஏதும் ஆராய்ச்சி பண்ணாரா??

டாக்டர்: ஆமா சார் கனவுகள் பத்தி ஒரு ஆராய்ச்சி பண்ணாரு.

ஆய்வாளர்: சரி. இத பத்தி யாருக்கும் வெளிய சொல்ல கூடாது. சொன்ன உங்க மேல நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்.

டாக்டர்: சரி சார்.

ஆய்வாளர் வெளியே வந்து என்னை பாராட்டினார்.

ஆய்வாளர்: சத்யா யூ ஆர் ரியலீ கிரேட்.. அந்த டாக்டர் ஒரு இடது கை பழக்கம் உள்ளவர். கடைசியா கனவுகள பத்தி தான் ஆராய்ச்சி பண்ணிருக்காரு.

சத்யா: சார் இன்னும் நாம முழுசா கண்டுபிடிக்கல. அந்த கத்தில இருந்த ரத்தத்தையும் இதையும் டெஸ்ட் பண்ணி பாக்கணும். அப்பறம் தான் தெரியும்.

இருவரும் டெஸ்ட் ரிப்போர்ட் வாங்க காத்திருந்தோம். எப்பொழுதும் போல என் கேஸ் தவறாகவில்லை.

நானும் ஆய்வாளரும் அந்த சைகாற்றிஸ்ட்டை காண அப்பாயின்மென்ட் வாங்கினோம். எங்கள் முறை வந்ததும் உள்ளே சென்றோம். என்னைப் பார்த்ததும் ஒரு நிமிடம் வியர்த்துப்போனார் வசந்த்.

சத்யா: என்ன Mr.Y பயந்துட்டீங்களா??

வசந்த்: யாரு நீங்க நான் ஏன் உங்கள பாத்து பயப்டனும்??

சத்யா: நான் தான் ஏற்கனவே சொன்னேனே உன்ன நான் கண்டுபிடிச்சுட்டேன்னு.. அப்பறம் ஏன் ஒளருற??

வசந்த்: நான் ஒன்னும் உன் கனவுல வரல.

சத்யா: வசந்த். வசந்த்.. வசந்த்... நான் கனவா பத்தி பேசவே இல்லையே.

மாட்டிக்கொண்டதை உணர்ந்த வசந்த் தடுமாறினான்.

சத்யா: என்ன தான் நீ புதுசா ஆராய்ச்சி பண்ணி கனவுல புகுந்தாலும் உன் பழக்கத்த மாத்த முடியலையே வசந்த் உன்னால.

வசந்த்: எப்டி என்ன கண்டுபிடிச்ச??

சத்யா: உன்னோட தடுமாற்றம், உன்னோட பழக்கவழக்கம் இதான் உன்ன எனக்கு அடையாளம் காட்டுச்சு. கனவுல புகுருற தந்திரத்த கத்துகிட்ட நீ பழக்கத்த கண்ட்ரோல் பண்ண கத்துக்கலையே. இப்ப உன் தப்ப ஒத்துக்குற நேரம்.

வசந்த்: யூ ஆர் எ ப்லட்டி ஜீனியஸ்..

சத்யா: தாங்க்யூ...

வசந்த்: நான் உலகத்துலேயே பெரிய சைகாற்றிஸ்ட்டா ஆகணும்ன்னு தான் கனவா பத்தின ஆராய்ச்சிய ஆரம்பிச்சேன். மத்தவங்க கனவுல போய் மெரட்டுரது எனக்கு ஒரு போதைய தந்துச்சு. அதவச்சு கொஞ்சம் பெரிய ஆளா வரணும்னு பாத்தேன். பட் யூ காட் மீ...

ஆக்ரோசமாக பேசிக்கொண்டிருந்த வசந்த் மயங்கி கீழே விழுந்தான்.

ஆய்வாளர்: வசந்த்.. என்ன ஆச்சு?? வசந்த்...(பதறினார்)

சத்யா: ஒன்னும் இல்ல சார். வசந்த் இனிமே எந்திரிக்க மாட்டான்.

ஆய்வாளர்: என்ன சொல்ற சத்யா??

சத்யா: நான் உங்கட்ட ஒரு விஷயத்த மறச்சுட்டேன்.

ஆய்வாளர்: என்ன??

சத்யா: அவன் கனவுல வந்தப்பவே நா அவன தலைல கம்பியால அடிச்சேன். அதனால அவன் மூளை செயல் கொறைய ஆரம்பிச்சுடுச்சு. அது தெரியாம அதுக்கும் அவன் தானே ட்ரீட்மென்ட் எடுத்துகிட்டு இருந்தான். இப்போ கோமாக்கு போயிட்டான். அவ்ளோ தான்.

ஆய்வாளர்: சத்யா உனக்கு என்ன பைத்தியமா?? அவன் எப்டி கனவுல ட்ராவல் பண்றான் அது எப்டி உண்மையா நடக்குதுன்றத பத்தி அவன் சொல்றதுக்குள்ள இப்படி ஆயிடுச்சே..

சத்யா: இல்ல சார். கொஞ்சம் யோசிச்சு பாருங்க. இவன ஜெயில்ல அடச்சாலும் இவனோட கனவ அடைக்க முடியாது.அது பெரிய ஆபத்து தான். அவன் கனவா அடக்க ஒரே வழி இதான். அதான் நான் இப்டி செஞ்சேன். அது தப்புன்னா நீங்க என்ன அரஸ்ட் பண்ணலாம். இது வெளிய தெரிஞ்ச இவன மாதிரி பலபேர் உருவாக வாய்ப்பு இருக்கு சார்.

ஆய்வாளர்: இங்க நாம மட்டும் தான் இருக்கோம். இது வெளிய போக வாய்ப்பே இல்ல.

சத்யா: நான் என்னையே நம்ப மாட்டேன் சார். எல்லாம் ஒரு சேப்டிக்கு தான்.(சிரித்தேன்).

ஆய்வாளர்: குட் மை பாய்.. ப்ரௌட் ஆப் யூ.(தோளில் தட்டிக்கொடுக்கிறார்).

அன்று ஏப்ரல் 22, 2015. காலை 8.00 மணி.

கையில் செய்தித்தாளுடன் காபி குடித்துக்கொண்டு இருந்தேன். செய்தித்தாளில்:

"கனவுக்கள்ளன் பிடிபட்டான். சைகாற்றிஸ்ட் வசந்த் தான் அந்த கள்வனா?? அதிர்ச்சி தகவல். காவல்துறை ஆய்வாளர் சிறப்பு பேட்டி"

அந்த சிறப்பு பேட்டியில், "இந்த கேஸ் எங்களுக்கு இன்னும் கஷ்டமா இருந்துருக்கும். சத்யா என்ற பத்திரிக்கையாளர் கொஞ்சம் ரிஸ்க் எடுத்து செஞ்சதால தான் எங்களால இந்த கேஸ சால்வ் பண்ண முடிஞ்சுது. அந்த சைகாற்றிஸ்ட் இப்ப கோமால இருக்காரு. அதனால யாரும் கவலை பட வேண்டாம். சத்யா உனக்கு சிறப்பு நன்றிய காவல்துறை சார்பா சொல்லிக்கிறேன்."

'நாளைல இருந்து என் வாழ்க்கையே மாறலாம்.', என்று எண்ணிக்கொண்டு பேப்பரை புரட்டிவிட்டு வேலையை பார்க்க ஆரம்பித்தேன்...

                                                      ----------------------------------

Comments

Post a Comment