அது ஒரு அப்பார்ட்மெண்ட். கணிசமாக ஒரு 500 குடும்பங்கள் வாழ்ந்து வந்தனர். மொத்தமாக 5 ப்ளாக்கள். ஒரு ப்ளாக்கிற்கு 100 ப்ளாட்டுகள். பார்க்கிங் முதல் பார்க் வரை அனைத்தும் உள்ளேயே அமைந்து இருந்தது. வாசலில் "வந்தனா அப்பார்ட்மெண்ட்" என்ற போர்டு வரவேற்றது.
வந்தனா அப்பார்ட்மெண்ட்டில் எப்பொழுதும் குழந்தைகள் சிரிப்பொலி கேட்டுக்கொண்டே இருக்கும். சூரியன் மறைந்தால் பார்க்கில் குழந்தைகள் விளையாடுவர். முதியோர் அமைதியாக நடைபோடுவர். வாடைக்காற்றில் மலர்களின் வாசம் மனதை கொண்டு சென்றது.
'ஏ' ப்ளாக்கில் 53ஏ பிளாட்டில் தனது மனைவி அஞ்சலி மற்றும் மகள் சுஜியுடன் வாழ்ந்து வந்தார் சுதாகர். சுதாகர் ஒரு மார்க்கெட்டிங் மேனேஜர். யாருடனும் அதிகமாக பேசவும் பழகவும் மாட்டார். தான் வருவதும் போவதும் யாருக்கும் தெரியாதது போல வாழ்ந்துவந்தார். ஒரு மாதம் வெகேசன் லீவ் கிடைத்த மகிழ்ச்சியில் வீட்டில் இருந்தார் சுதாகர்.
அன்று காலை விழித்த அஞ்சலிக்கு பெரிய அதிர்ச்சி.....
அப்படி அவள் கண்ட காட்சி தன் என்ன???
அவள் எழும் முன்னரே சமையல் முடிந்து உணவுகள் டைனிங் டேபிளில் அடிக்கி வைக்கப்பட்டிருந்தன. தன் கணவர் சமைத்திருக்கலாம் அல்லது ஹோட்டலில் வாங்கி வந்திருப்பார் என எண்ணினாள். உணவை சாப்பிட்டுவிட்டு தன் வேலையை தொடர்ந்தாள். மாலை வந்த சுதாகரிடம் அதை கேட்க மறந்தாள்.
மறுநாள் காலை எழுந்து வாசலை திறந்தாள். அங்கே தனக்கு முன்னர் யாரோ தன் வீட்டு வாசலில் கோலமிட்டிருந்தனர். பக்கத்துவீட்டினர் போட்டிருப்பர் என்று எண்ணி விட்டுவிட்டாள். அன்றும் சமையல் முடிந்திருந்தது. அஞ்சலிக்கு சந்தேகம் மேலிட்டது. தன் கணவனிடம் கூறினாள். "என்னங்க இன்னிக்குமா சாப்பாடு வாங்குனீங்க??", என்றாள். தூக்கத்தில் இருந்த சுதாகர் "ஏன்டீ ஒளருற??", என்று கேட்டு தூக்கத்தை தொடர்ந்தார். அஞ்சலி குழப்பத்துடன் சென்றாள்.
அன்று இரவு லேட்டாக வந்தார் சுதாகர். கதவு திறக்கப்பட்டிருந்தது. அஞ்சலி தான் காத்திருக்கிறாள் என்று எண்ணி உள்ளே நுழைந்தார் சுதாகர். அங்கே அவர் கண்ட காட்சி, அவரது மகள் சுஜி வேறொரு சிறுமியுடன் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தாள். சுதாகர் சுஜியிடம் "யாருமா இந்த பொண்ணு??", என்று கேட்டார். "இது என் ப்ரெண்டுப்பா பேரு சஞ்சனா", என்றாள் மழலை குரலில். சஞ்சனா எதையும் கவனிக்காமல் டிவி பார்த்துக்கொண்டிருந்தாள். சுதாகர் சுஜியை தூங்கச்சொன்னார்.சுஜி உள்ளே சென்றாள். "எங்கம்மா உன் ப்ரெண்டு??", என்று கேட்டார் சுதாகர். "அவ தூங்க போயிட்டாப்பா", என்று கூறி படுத்துக்கொண்டாள் சுஜி. தன் மகளை அன்பாக அணைத்துக்கொண்டு உறங்கினார் சுதாகர்.
வழக்கம் போல காலை கோலமும் உணவும் அஞ்சலியை பயமுறுத்தியது. அன்று மற்றும் ஒரு ஆச்சரியமாக சுஜி எழுந்து சோபாவில் அமர்ந்திருந்தாள். அஞ்சலி அவளிடம் வந்து "குட்டிமா எப்ப எந்திரிச்சீங்க??", என்று கொஞ்சினாள். சுஜியின் மழலை சிரிப்பு அவளை அனைத்தையும் மறக்கடித்தது. அப்போது அவள் சுதாகரிடம் "என்னங்க இன்னிக்கும் கோலம் போட்ருக்காங்க சமையல் செஞ்சுருக்காங்க யாருன்னு தெரில", என்றாள். அப்போது சுஜி குறுக்கிட்டு "அம்மா என் ப்ரெண்டு சஞ்சனாவோட அம்மா தான் சமையல் செஞ்சாங்க", என்றாள். "அவங்க என் சமையல் செஞ்சாங்க??", என்றாள் அஞ்சலி. "நான் பசிக்குதுன்னு சொன்னேனா அவங்க தான் செஞ்சு ஊட்டிவிட்டாங்க. அப்பறம் வேலைக்கு போய்டாங்க", என்றாள் சுஜி.
அஞ்சலி ஆறுதல் அடைந்தாள். ஆனாலும் ஒரு சிறு குழப்பம் இருந்தது. அன்று வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்தார் சுதாகர். மாலை 6 மணி. யாரோ கதவை திறப்பது தெரிந்தது. உள்ளே வந்தது அந்த சின்ன பெண் சஞ்சனா. அவளுடன் வந்தது அவள் பெற்றோர் என்று அவள் கூப்பிட்டது உணர்த்தியது. அவர்கள் சுதாகரை கவனிக்கவே இல்லை. உள்ளே வந்ததும் சுஜி அவர்களுடன் ஒட்டிக்கொண்டாள். அவர்களுடன் விளையாடிய சுஜியை அழைத்த சுதாகர் "யாரும்மா இவங்க", என்று கேட்டார். "இவங்க தான் சஞ்சனாவோட அம்மா அப்பா", என்றாள்.
அப்போது சஞ்சனாவின் அம்மா சுஜியை அழைத்து "சுஜி அங்க யார் கூட பேசிற்றுக்க??", என்று கேட்டாள். "எங்க அப்பா கூட", என்று சுஜி கூறினாள். "அங்க தான் யாருமே இல்லையே", என்றாள்.
அப்போது சஞ்சனா "அம்மா சுஜி அப்பப்ப இப்டி தான்மா தானா பேசிகிறா", என்றாள். அப்போது அங்கே வந்த சஞ்சனாவின் தந்தை சுஜியை தூக்கி கொஞ்சி சாப்பிட அழைத்துச்சென்றார். சுதாகருக்கு இதைக்கேட்டதும் கிறுக்கு பிடித்தது போல் ஆனது. அங்கே வந்த அஞ்சலி நடந்ததை தன் கணவனிடம் கேட்டு அறிந்தாள். அவள் சந்தேகம் இன்னும் வலுத்தது.
அவர்கள் இருவரும் மற்றவர்களின் கண்ணுக்கு தென்படவில்லை என்பதை கேட்டதும் தங்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதை உணர முடியாமல் தவித்தனர். ஒருவேளை வந்தவர்கள் ஆவியாக இருப்பார்களோ என்று எண்ணினர். அப்படியே ஆவியாக இருந்தாலும் சுஜி மட்டும் அவர்கள் கண்ணுக்கு தென்படுகிறாள், நாம் ஏன் தென்படவில்லை?? ஒருவேளை அவர்களால் சுஜிக்கு ஆபத்து நேரிடுமோ??.. என்று பல கேள்விகள் அவர்களுக்குள் ஓடின.
என்ன செய்வதென்று புரியாமல் அந்த அப்பார்ட்மெண்ட் செகரட்டரியிடம் சென்றனர். இவர்கள் பேசியது எதுவும் அவர் காதில் விழாதது போல அவர் அமர்ந்திருந்தார். அவர் கண்களுக்கு தாங்கள் தென்படுகிறோமா என்கிற சந்தேகம் எழுந்தது அவர்களுக்கு. வேறு வழியின்றி வீட்டிற்கு சென்றனர். நிம்மதி போனது.
அஞ்சலி திடீரென அலறினாள். அதைக்கேட்டு பதறிப்போய் பார்த்தார் சுதாகர். அங்கே அவள் மயக்கமாக கிடந்தாள். அவளை எழுப்பிய சுதாகர் என்ன நடந்தது என்று கேட்டார். அஞ்சலி ஒரு நியூஸ்பேப்பரை காட்டினாள். அதைக்கண்ட சுதாகரின் இதயம் ஒரு நிமிடம் நின்றேவிட்டது. அது 20நாட்கள் முந்தைய நியூஸ்பேப்பர். நியூஸ்பேப்பரில்,
"வந்தனா அப்பர்ட்மேண்டில் வசித்துவந்த சுதாகர் என்ற மார்க்கெட்டிங் மேனேஜர் வயது 36. அவரது மனைவி அஞ்சலி வயது 34. அவர்கள் மகள் சுஜி வயது 6. சுதாகரும் அவரது மனைவியும் காரில் சென்றுகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை மாறிய ஒரு லாரி அவர்கள் காரில் மோதியது. இச்சம்பவத்தில் சுதாகரும் அவர் மனைவி அஞ்சலியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்."
என்று அவர்கள் போட்டோவுடன் செய்தி வந்திருந்தது. குழந்தை சுஜியின் நிலை என்ன??
அப்போதுதான் கவனித்தனர். சுஜியின் அறையில் சுதாகர் அஞ்சலியின் போட்டோ மாட்டப்பட்டு அதற்கு மாலை போடப்பட்டிருந்தது. சுஜி எவ்வாறு இந்த குடும்பத்தில் இணைந்தாள் என்று கண்ணீருடன் யோசித்தனர்.
அப்போது பேசும் சத்தம் கேட்டது. சஞ்சனாவின் பெற்றோர் சுஜியின் அறைக்கு வந்தனர். சஞ்சனாவின் அப்பா "பாவம் சுஜி. இன்னும் அவங்க அம்மா அப்பா நெனப்பாவே இருக்கா", என்றார். அதற்க்கு அவர் மனைவி "ஆமா அந்த ஹோம்ல இருந்து நாம கூட்டிட்டு வந்ததுல இருந்து அவங்க நெனப்பாவே தான் இருக்கா. நாம அவங்க பிளாட்ட வாங்குனது அவளுக்கு சந்தோஷம் தான். ஆனா இது அவங்க நெனப்ப அவளுக்குஅதிகப்படுத்துது", என்றாள். "இவளும் நம்ம பொண்ணு தான் இனி அந்த நெனப்பு அவளுக்கு வராம பாத்துக்கணும்.", என்று கூறி சுஜியின் நெற்றியில் முத்தமிட்டு இருவரும் சென்றனர்.
அப்போது தான் புரிந்தது அவர்கள் இறந்த பிறகு சுஜி ஒரு ஹோமில் சேர்க்கப்பட்டிருக்கிறாள். இவர்கள் தத்தெடுத்து அதே ப்ளாட்டை வாங்கி குடிவந்திருக்கிறார்கள் என்று. என்ன இருந்தாலும் தங்கள் மகளுக்கு தங்களுக்கு பின் நல்ல குடும்பம் கிடைத்ததை எண்ணி "மகிழ்ச்சியுடன் மறைந்தனர்".
"WELCOME TO VANDHANAA APARTMENT"
வந்தனா அப்பார்ட்மெண்ட்டில் எப்பொழுதும் குழந்தைகள் சிரிப்பொலி கேட்டுக்கொண்டே இருக்கும். சூரியன் மறைந்தால் பார்க்கில் குழந்தைகள் விளையாடுவர். முதியோர் அமைதியாக நடைபோடுவர். வாடைக்காற்றில் மலர்களின் வாசம் மனதை கொண்டு சென்றது.
'ஏ' ப்ளாக்கில் 53ஏ பிளாட்டில் தனது மனைவி அஞ்சலி மற்றும் மகள் சுஜியுடன் வாழ்ந்து வந்தார் சுதாகர். சுதாகர் ஒரு மார்க்கெட்டிங் மேனேஜர். யாருடனும் அதிகமாக பேசவும் பழகவும் மாட்டார். தான் வருவதும் போவதும் யாருக்கும் தெரியாதது போல வாழ்ந்துவந்தார். ஒரு மாதம் வெகேசன் லீவ் கிடைத்த மகிழ்ச்சியில் வீட்டில் இருந்தார் சுதாகர்.அன்று காலை விழித்த அஞ்சலிக்கு பெரிய அதிர்ச்சி.....
அப்படி அவள் கண்ட காட்சி தன் என்ன???
அவள் எழும் முன்னரே சமையல் முடிந்து உணவுகள் டைனிங் டேபிளில் அடிக்கி வைக்கப்பட்டிருந்தன. தன் கணவர் சமைத்திருக்கலாம் அல்லது ஹோட்டலில் வாங்கி வந்திருப்பார் என எண்ணினாள். உணவை சாப்பிட்டுவிட்டு தன் வேலையை தொடர்ந்தாள். மாலை வந்த சுதாகரிடம் அதை கேட்க மறந்தாள்.
மறுநாள் காலை எழுந்து வாசலை திறந்தாள். அங்கே தனக்கு முன்னர் யாரோ தன் வீட்டு வாசலில் கோலமிட்டிருந்தனர். பக்கத்துவீட்டினர் போட்டிருப்பர் என்று எண்ணி விட்டுவிட்டாள். அன்றும் சமையல் முடிந்திருந்தது. அஞ்சலிக்கு சந்தேகம் மேலிட்டது. தன் கணவனிடம் கூறினாள். "என்னங்க இன்னிக்குமா சாப்பாடு வாங்குனீங்க??", என்றாள். தூக்கத்தில் இருந்த சுதாகர் "ஏன்டீ ஒளருற??", என்று கேட்டு தூக்கத்தை தொடர்ந்தார். அஞ்சலி குழப்பத்துடன் சென்றாள்.
அன்று இரவு லேட்டாக வந்தார் சுதாகர். கதவு திறக்கப்பட்டிருந்தது. அஞ்சலி தான் காத்திருக்கிறாள் என்று எண்ணி உள்ளே நுழைந்தார் சுதாகர். அங்கே அவர் கண்ட காட்சி, அவரது மகள் சுஜி வேறொரு சிறுமியுடன் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தாள். சுதாகர் சுஜியிடம் "யாருமா இந்த பொண்ணு??", என்று கேட்டார். "இது என் ப்ரெண்டுப்பா பேரு சஞ்சனா", என்றாள் மழலை குரலில். சஞ்சனா எதையும் கவனிக்காமல் டிவி பார்த்துக்கொண்டிருந்தாள். சுதாகர் சுஜியை தூங்கச்சொன்னார்.சுஜி உள்ளே சென்றாள். "எங்கம்மா உன் ப்ரெண்டு??", என்று கேட்டார் சுதாகர். "அவ தூங்க போயிட்டாப்பா", என்று கூறி படுத்துக்கொண்டாள் சுஜி. தன் மகளை அன்பாக அணைத்துக்கொண்டு உறங்கினார் சுதாகர்.
வழக்கம் போல காலை கோலமும் உணவும் அஞ்சலியை பயமுறுத்தியது. அன்று மற்றும் ஒரு ஆச்சரியமாக சுஜி எழுந்து சோபாவில் அமர்ந்திருந்தாள். அஞ்சலி அவளிடம் வந்து "குட்டிமா எப்ப எந்திரிச்சீங்க??", என்று கொஞ்சினாள். சுஜியின் மழலை சிரிப்பு அவளை அனைத்தையும் மறக்கடித்தது. அப்போது அவள் சுதாகரிடம் "என்னங்க இன்னிக்கும் கோலம் போட்ருக்காங்க சமையல் செஞ்சுருக்காங்க யாருன்னு தெரில", என்றாள். அப்போது சுஜி குறுக்கிட்டு "அம்மா என் ப்ரெண்டு சஞ்சனாவோட அம்மா தான் சமையல் செஞ்சாங்க", என்றாள். "அவங்க என் சமையல் செஞ்சாங்க??", என்றாள் அஞ்சலி. "நான் பசிக்குதுன்னு சொன்னேனா அவங்க தான் செஞ்சு ஊட்டிவிட்டாங்க. அப்பறம் வேலைக்கு போய்டாங்க", என்றாள் சுஜி.
அஞ்சலி ஆறுதல் அடைந்தாள். ஆனாலும் ஒரு சிறு குழப்பம் இருந்தது. அன்று வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்தார் சுதாகர். மாலை 6 மணி. யாரோ கதவை திறப்பது தெரிந்தது. உள்ளே வந்தது அந்த சின்ன பெண் சஞ்சனா. அவளுடன் வந்தது அவள் பெற்றோர் என்று அவள் கூப்பிட்டது உணர்த்தியது. அவர்கள் சுதாகரை கவனிக்கவே இல்லை. உள்ளே வந்ததும் சுஜி அவர்களுடன் ஒட்டிக்கொண்டாள். அவர்களுடன் விளையாடிய சுஜியை அழைத்த சுதாகர் "யாரும்மா இவங்க", என்று கேட்டார். "இவங்க தான் சஞ்சனாவோட அம்மா அப்பா", என்றாள்.
அப்போது சஞ்சனாவின் அம்மா சுஜியை அழைத்து "சுஜி அங்க யார் கூட பேசிற்றுக்க??", என்று கேட்டாள். "எங்க அப்பா கூட", என்று சுஜி கூறினாள். "அங்க தான் யாருமே இல்லையே", என்றாள்.
அப்போது சஞ்சனா "அம்மா சுஜி அப்பப்ப இப்டி தான்மா தானா பேசிகிறா", என்றாள். அப்போது அங்கே வந்த சஞ்சனாவின் தந்தை சுஜியை தூக்கி கொஞ்சி சாப்பிட அழைத்துச்சென்றார். சுதாகருக்கு இதைக்கேட்டதும் கிறுக்கு பிடித்தது போல் ஆனது. அங்கே வந்த அஞ்சலி நடந்ததை தன் கணவனிடம் கேட்டு அறிந்தாள். அவள் சந்தேகம் இன்னும் வலுத்தது.
அவர்கள் இருவரும் மற்றவர்களின் கண்ணுக்கு தென்படவில்லை என்பதை கேட்டதும் தங்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதை உணர முடியாமல் தவித்தனர். ஒருவேளை வந்தவர்கள் ஆவியாக இருப்பார்களோ என்று எண்ணினர். அப்படியே ஆவியாக இருந்தாலும் சுஜி மட்டும் அவர்கள் கண்ணுக்கு தென்படுகிறாள், நாம் ஏன் தென்படவில்லை?? ஒருவேளை அவர்களால் சுஜிக்கு ஆபத்து நேரிடுமோ??.. என்று பல கேள்விகள் அவர்களுக்குள் ஓடின.
என்ன செய்வதென்று புரியாமல் அந்த அப்பார்ட்மெண்ட் செகரட்டரியிடம் சென்றனர். இவர்கள் பேசியது எதுவும் அவர் காதில் விழாதது போல அவர் அமர்ந்திருந்தார். அவர் கண்களுக்கு தாங்கள் தென்படுகிறோமா என்கிற சந்தேகம் எழுந்தது அவர்களுக்கு. வேறு வழியின்றி வீட்டிற்கு சென்றனர். நிம்மதி போனது.
அஞ்சலி திடீரென அலறினாள். அதைக்கேட்டு பதறிப்போய் பார்த்தார் சுதாகர். அங்கே அவள் மயக்கமாக கிடந்தாள். அவளை எழுப்பிய சுதாகர் என்ன நடந்தது என்று கேட்டார். அஞ்சலி ஒரு நியூஸ்பேப்பரை காட்டினாள். அதைக்கண்ட சுதாகரின் இதயம் ஒரு நிமிடம் நின்றேவிட்டது. அது 20நாட்கள் முந்தைய நியூஸ்பேப்பர். நியூஸ்பேப்பரில்,
"வந்தனா அப்பர்ட்மேண்டில் வசித்துவந்த சுதாகர் என்ற மார்க்கெட்டிங் மேனேஜர் வயது 36. அவரது மனைவி அஞ்சலி வயது 34. அவர்கள் மகள் சுஜி வயது 6. சுதாகரும் அவரது மனைவியும் காரில் சென்றுகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை மாறிய ஒரு லாரி அவர்கள் காரில் மோதியது. இச்சம்பவத்தில் சுதாகரும் அவர் மனைவி அஞ்சலியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்."
என்று அவர்கள் போட்டோவுடன் செய்தி வந்திருந்தது. குழந்தை சுஜியின் நிலை என்ன??
அப்போதுதான் கவனித்தனர். சுஜியின் அறையில் சுதாகர் அஞ்சலியின் போட்டோ மாட்டப்பட்டு அதற்கு மாலை போடப்பட்டிருந்தது. சுஜி எவ்வாறு இந்த குடும்பத்தில் இணைந்தாள் என்று கண்ணீருடன் யோசித்தனர்.
அப்போது பேசும் சத்தம் கேட்டது. சஞ்சனாவின் பெற்றோர் சுஜியின் அறைக்கு வந்தனர். சஞ்சனாவின் அப்பா "பாவம் சுஜி. இன்னும் அவங்க அம்மா அப்பா நெனப்பாவே இருக்கா", என்றார். அதற்க்கு அவர் மனைவி "ஆமா அந்த ஹோம்ல இருந்து நாம கூட்டிட்டு வந்ததுல இருந்து அவங்க நெனப்பாவே தான் இருக்கா. நாம அவங்க பிளாட்ட வாங்குனது அவளுக்கு சந்தோஷம் தான். ஆனா இது அவங்க நெனப்ப அவளுக்குஅதிகப்படுத்துது", என்றாள். "இவளும் நம்ம பொண்ணு தான் இனி அந்த நெனப்பு அவளுக்கு வராம பாத்துக்கணும்.", என்று கூறி சுஜியின் நெற்றியில் முத்தமிட்டு இருவரும் சென்றனர்.அப்போது தான் புரிந்தது அவர்கள் இறந்த பிறகு சுஜி ஒரு ஹோமில் சேர்க்கப்பட்டிருக்கிறாள். இவர்கள் தத்தெடுத்து அதே ப்ளாட்டை வாங்கி குடிவந்திருக்கிறார்கள் என்று. என்ன இருந்தாலும் தங்கள் மகளுக்கு தங்களுக்கு பின் நல்ல குடும்பம் கிடைத்ததை எண்ணி "மகிழ்ச்சியுடன் மறைந்தனர்".
-----மீண்டும் வருக "VANDHANAA APARTMENT"-----
Jollyana thriller kathai.. 😱😱😱😱😱
ReplyDelete